ஆஸ்திரேலியா அருகே சுனாமி - பசுபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
யசோதா (Author) Published Date : Nov 20, 2017 10:40 ISTWorld News
நியூ கலேடோனியா அருகே தெற்கு பசிபிக் கடல் பகுதியில் லாயல்டி தீவு உள்ளது. இன்று காலை இந்த தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சில நிமிடங்கள் வரை நீடித்துள்ள்ளது. டடேன் பகுதியிலிருந்து 300 கி.மீ தொலைவில் சுமார் 82 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து ஹவாயில் உள்ள பசுபிக் சுனாமி எச்சரிக்கை ஆய்வு மையம், நிலநடுக்க பகுதியில் இருந்து 300 கி.மீ தொலைவில் கடலோர பகுதிகளில் அமைந்துள்ள நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சுனாமி அலைகள் வழக்கத்திற்கு மாறாக 1 மீ அளவுக்கு உயர்த்தி எழுந்துள்ளது. இந்த சுனாமி தாக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் தெரிவில்லை. இதனால் கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து செல்கின்றனர்.