உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் தாஜ்மஹால் இரண்டாவது இடம்
விக்னேஷ் (Author) Published Date : Dec 10, 2017 13:38 ISTWorld News
காதல் சின்னமாக விளங்கும் தாஜ்மஹாலை பார்க்க ஆண்டுக்கு 80 லட்சத்திற்கும் மேலானோர் வருகின்றனர். இந்தியாவின் சிறந்த கட்டடக்கலைக்கு சான்றாக விளங்கும் தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது. உலகின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலை முன்னணி சுற்றுலா இணையதளமான 'ட்ரிப் அட்வைசர்' வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவில் முதல் இடத்தையும், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த தாஜ்மஹால் 1632 முதல் 1653 வரையிலான காலகட்டத்தில் முகலாய பேரரசர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக காட்டியதால் காதல் சின்னமாக போற்றப்படுகிறது.
உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்களுள் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹால் உலக பாரம்பரிய சின்னமாக 1983-ஆம் ஆண்டு அறிவித்தது. உலகில் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகள் அளித்த மதிப்பீட்டின் படி 'ட்ரிப் அட்வைசர்' உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் கட்டட கலை மற்றும் வரலாற்று கூற்றுகளின் அடிப்படையில் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோட்டை ஈடு இணையற்றதாக விளங்குகிறது. இந்த பட்டியலில் சீன பெருஞ்சுவர், இஸ்ரேலின் பழமையான நகரமான ஜெருசலேம், துருக்கியின் இஸ்தான்பூர் நகரில் உள்ள வரலாற்று சின்னங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.