ads

ராமர் பாலம் இயற்கையானதா செயற்கையானதா அமெரிக்க விஞ்ஞானிகள்

rama bridge

rama bridge

ஆதாம் பாலம் அல்லது ராமர் பாலம் என்பது சுமார் 3500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் தலை மன்னார் வரை 30கி.மீ நீளம் வரை அமைந்துள்ளது. இந்த பாலம் மன்னார் வளைகுடாவையும் பாக்ஜலசந்தியையும் பிரிக்கிறது. இதன் ஆழம் 30 அடி வரை உள்ளது. 2005-ஆம் ஆண்டு சேது சமுத்திர திட்டம், இந்தியா - இலங்கை இடையிலான கடல் பகுதியை போக்குவரத்துக்காக பயன்படுத்த சேது சமுத்திர திட்டம்  உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி 400 கி.மீ தொலைவு மற்றும் 30 மணி நேரம் பயணம் மிச்சப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த திட்டம் ராமர் பாலத்தை சேதப்படுத்தும் வகையில் இருந்ததால் இந்த பாலத்தின் தொன்மையை காப்பாற்றும் முயற்சியில் பல்வேறு அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வரலாற்று கூற்றுகளின்படி ராமர் பலமானது, இராமாயணத்தில் இராமர் ராவணனிடமிருந்து சீதையை காப்பாற்ற மிதக்கும் கற்கள், மண், மரங்கள் இவற்றை கொண்டு வானர சேனைகள் கட்டியதாக கூறப்படுகிறது என்றும் அரேபிய புராணத்தின்படி 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆதாம் உச்சியை அடைய இந்த பாலத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆகையால் இதற்கு ஆதாம் பாலம் என பெயரிடப்பட்டுள்ளது. ராமர் பாலத்தின் மீது பல்வேறு வகையான அகழ்வாராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 

சில புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மனிதரால் கட்டப்பட்டது என்று கருதினாலும் இந்த பாலம் இயற்கையாகவே தோன்றியதாக கூறுகின்றனர். இந்தியா நிலபொதியியல் கழகம் நடத்திய ஆய்வில் இந்த பாலம் செயற்கையாக கட்டப்பட்டதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராமர் பாலம் இயற்கையாக உருவானதோ அல்லது கட்டிக்கதைகளோ அல்ல, இது மனிதரால் கட்டப்பட்டது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ஓரிக்கன் பல்கலைக்கழகம், கொலரோடா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகம் போன்றவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை கண்டறிந்துள்ளனர். 

இது குறித்து தெற்கு ஓரிக்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செல்சியஸ் ரோஸ் "ராமர் பாலம் கடலுக்கடியில் உள்ள மணல் திட்டுகள் வேண்டுமென்றால் இயற்கையாக அமைந்ததாக இருக்கலாம் ஆனால் அதற்கு மேல் உள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள் மனிதரால் 7000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார். இந்த கண்டுபிடிப்பை அமெரிக்க விஞ்ஞானிகள், டிஸ்கவரி கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு தொலைக்காட்சியில் இன்று காலை ஒளிபரப்பப்பட்டது. இதற்கான முன்னோட்டங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி 16 மணி நேரத்தில் 11 லட்சம் பேர் இதனை கண்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்பை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி ஸ்ம்ருதி ராணி வரவேற்றுள்ளார். 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற தலைப்பில் இந்த முன்னோட்டம் வெளிவந்தது.

ராமர் பாலம் இயற்கையானதா செயற்கையானதா அமெரிக்க விஞ்ஞானிகள்