ads
உலகின் பணக்கார நபர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் முதலிடம்
விக்னேஷ் (Author) Published Date : Jun 20, 2018 18:27 ISTWorld News
தற்போது போர்ப்ஸ் பத்திரிகை 2018ஆம் ஆண்டுக்கான உலகின் பணக்கார நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரபல வர்த்தக தலமான அமேசான் நிறுவன தலைவரான ஜெப்பெசோஸ் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு மட்டும் 142 பில்லியன் டாலராகும். உலகம் தனது வர்த்தக சேவையினை வழங்கி வரும் அமேசான் நிறுவனம் தற்போது 5 லட்சம் ஊழியர்களுடன் உலகத்தின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இது தவிர அதிக மதிப்பு கொண்ட பட்டியலிலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்த பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த பில்கேட்ஸ் இந்த முறை இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வந்த இவர் இந்த முறை 93 பில்லியன் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில உள்ளார்.
இந்த முறை உலகம் முழுதும் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தொடர்ந்து அவர் மீது வந்த சர்ச்சையால் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையின் முடிசூடா மன்னனான ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 22வது இடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலராகவும். இது தவிர இவர் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.