ads

அமெரிக்காவின் ஹச்ஒன்பி விசா விதிகளில் அதிரடி மாற்றம்

சமீபத்தில் அமெரிக்காவின் H-1B விசா பெறுவோருக்கான புதிய நிபந்தனைகள் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் H-1B விசா பெறுவோருக்கான புதிய நிபந்தனைகள் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சியின் போது கணவர் மனைவி இருவரும் அமெரிக்காவில் பணிபுரிய 'H-4' விசா அளிக்கப்பட்டது. இந்த விசா பெறுபவர் அமெரிக்காவின் எந்த நிறுவனத்திடம் வேண்டுமானாலும் பணிபுரியலாம். இதனால் 'H-1B' விசா பெறுவோருக்கு இருக்கும் கட்டுப்பாடு 'H-4' விசா பெறுவோருக்கு இல்லை. இதனால் அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான தொழிலாளர்களை ஈர்த்து வந்தது.

இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்நிலையில் H-4 விசாவை ரத்து செய்ய தற்போது அதிபராக இருக்கும் ட்ரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவிற்கு அமெரிக்காவில் ஏராளமான அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தது. இதனை அடுத்து தற்போது H-1B விசா பெறுவோருக்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையில் H-1B விசா பெறுவோர் கடந்த 5 வருடங்களாக உபயோகித்து வந்த மொபைல் எண், இ-மெயில் முகவரி மற்றும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் முகவரிகள் ஆகியவையும் அளிக்க வேண்டும்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அமெரிக்க அரசின் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் படி விசா பெறுவோர், ஐந்து வருடங்களில் ஏதேனும் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவரா, அவருடைய குடும்ப அங்கத்தினர் ஏதேனும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்த தகவல்களையும் அளிக்க வேண்டும். அமெரிக்க அரசின் இந்த புதிய தீர்மானத்தின் படி அமெரிக்காவில் நிரந்தர குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்கும் 7 லட்சம் பேர் மற்றும் தற்காலிக குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்கும் 1.4 கோடி மக்கள் பாதிக்கப்படுவர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹச்ஒன்பி விசா விதிகளில் அதிரடி மாற்றம்