Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் 3பேர் பலி

எரிமலை வளையத்தினுள் அமைந்த ஜப்பான் மற்றும் கவுதமாலாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தில் பல தீவுகளால் சூழப்பட்ட நாடான ஜப்பானில் இன்று (திங்கட் கிழமை) காலை வேலையில், பிஸியான நகரமான ஒசாகாவில் (Osaka) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை நில அதிர்வு கோல் (JMA Seismic Intensity scale) மூலம் ரிக்டர் அளவுகோலில் 5.9 என்று ஜப்பான் வானிலை மையம் கணித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியுள்ளது.

இதனால் பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருந்த 9வயது சிறுமி சுவர் இடிந்து விழுந்ததில் மாட்டி கொண்டு உயிரிழந்துள்ளார். மேலும் 85 மற்றும் 80 வயதான பெரியவர்கள் இடிபாடுகளில் சிக்கியதால் உயிரிழந்துள்ளனர். எதிர்பாராத தருணத்தில் நடந்த இந்த நிலநடுக்கத்தால் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 214 பேர் வரை கடுமையாக பதிப்படைந்துள்ளதாகவும் ஜப்பான் கேபினெட் செயலாளர் யோசிஹைட் சுகா (Yoshihide Suga) என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான சாலைகள், தண்ணீர் குழாய்கள் போன்றவை கடுமையாக சேதமடைந்துள்ளது.

திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து போன்றவை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ஒசாகா நகரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுமார் ஆறு மணிநேரம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் 108,000 வீடுகளில் எரிவாயு இணைப்புகளும்  சேதமடைந்துள்ளது. இதனால் வெளியேறிய எரிவாயு தீப்பிடித்து எரிந்ததில் பல வீடுகள் சேதமடைந்துள்ளது. இதே போன்று அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடான கவுதமாலாவிலும் கடந்த ஞாயிற்று கிழமை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஜப்பான் மற்றும் கவுதமாலா இரண்டு நாடுகளும் எரிமலை வளையத்தினுள் (Ring of Fire) அமைந்துள்ள நாடுகளாகும். இதனால் 40000 கிமீ தொலைவில் அமைந்துள்ள எரிமலை வளையத்தில் அடிக்கடி நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்து வருகிறது. இந்த பகுதியில் மட்டும் மொத்தமாக 472 எரிமலைகள் உள்ளது. உலகின் அதிக சக்தி வாய்ந்த எரிமலைகளும், 81 சதவீதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களும் இந்த பகுதியிலே நடக்கிறது. இது தவிர உலகம் முழுவதும் ஏற்படும் நிலநடுக்கங்களில் 90 சதவீதம் இந்த பகுதியில் மட்டுமே நடைபெறுகிறது.

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் 3பேர் பலி