இந்தோனேசியாவில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
வேலுசாமி (Author) Published Date : Dec 16, 2017 12:35 ISTWorld News
இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது இந்தோனேசியாவின் தலைநகரான ஜகாரிடாவில் இருந்து 200 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலுக்கடியில் 90 கி.மீ ஆழத்தில் சுமித்ரா தீவுக்கு மேற்கே இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் காரணமாக கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இரண்டு மணிநேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழு செய்தி தொடர்பாளர், இந்த நிலநடுக்கத்தால் 50 கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் சாலைகளில் தங்கியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தார் இதுவரை 2 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கினால் தான் இது குறித்த தகவல்கள் தெரிய வரும். மேலும் ஜாவா மாகாணத்தின் சில பகுதிகளில் மாபெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளது.