ads

கிரீன்லாந்தில் அமெரிக்க விமான தளத்திற்கு அருகே விழுந்த விண்கல்

கிரீன்லாந்தில் விமானப்படை தளத்திற்கு அருகே விழுந்த விண்கல்லை பூமியில் விழுவதற்கு முன்பு கணிக்க முடியவில்லை.

கிரீன்லாந்தில் விமானப்படை தளத்திற்கு அருகே விழுந்த விண்கல்லை பூமியில் விழுவதற்கு முன்பு கணிக்க முடியவில்லை.

உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தில் கடந்த ஜூலை 25ஆம் தேதி, 2.1 கிலோ டன் ஆற்றல் கொண்ட விண்கல் ஒன்று விழுந்துள்ளது. அமெரிக்காவின் விமானப்படை தளத்திற்கு அருகே இந்த விண்கல் விழுந்துள்ளது. இந்த வருடத்தில் விழுந்த விண்கல்லில் இது தான் இரண்டாவது சக்தி வாய்ந்த விண்கல்லாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியறிந்து சமூக வலைத்தளங்களில் அமெரிக்க விமானப்படை தளம் அழிந்து விட்டதாக தவறான செய்திகள் பரவி வந்தது. இது தவிர விமானப்படை தளத்திற்கு செய்தி பரவியவுடன் ஏகப்பட்ட செல்போன் அழைப்புகளும் வந்துள்ளது.

இந்த விண்கல்லானது மணிக்கு 87,000கிமீ வேகத்திலும் ஒலியை விட 74 மடங்கு வேகமாகவும் பயணிக்க கூடியது. இந்த விண்கல் கிரீன்லாந்தில் விழுந்ததற்கான தகவல் முதலில் டிவிட்டரில் இரண்டு ஆய்வாளர்கள் மூலம் மட்டுமே வெளியானது. இது குறித்து நாசாவின் உந்தல் ஆய்வக (NASA's Jet Propulsion Laboratory) நிர்வாகியான ரான் பால்கி (Ron Baalke) என்பவர் தனது டிவிட்டரில் "கடந்த ஜூலை 25ஆம் தேதி கிறீன்லாந்துக்கு மேலே நெருப்பு பந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிரீன்லாந்தில், 43.3 கிமீ உயரத்தில் விண்கல் இருந்த போது அமெரிக்க சென்சார் (US Government sensors) இதனை கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் 2.1கிலோடன் ஆற்றல் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்திருந்தார். இவரை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி, அமெரிக்காவின் அணு தகவல் திட்டத்தின் இயக்குனரான ஹான்ஸ் க்ரிஸ்டன் (Hans Kristensen) என்பவரும் இந்த விண்கல் குறித்து டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இவர்களின் தகவல்களுக்கு பிறகு கிரீன்லாந்தில் விழுந்த விண்கல் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெகுவாக பரவ துவங்கியது. இதனை அடுத்த நாசாவிற்கும், விமானப்படை தளத்திற்கும் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. பூமியின் சுற்றுப்பாதையை கடந்து கிரீன்லாந்தை நெருங்கிய பிறகும் இந்த விண்கல் குறித்த தகவல் வெளிவரவில்லை. மேலும் இந்த விண்கல்லின் புகைப்படங்களும் வெளியிடப்படவில்லை. அளவில் மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கல் சிறிய அளவாக இருந்ததால் பூமியில் விழுவதற்கு முன்பு கணிக்க முடியவில்லை என ஆய்வாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கிரீன்லாந்தில் அமெரிக்க விமான தளத்திற்கு அருகே விழுந்த விண்கல்