ads

உலக சுற்றுசூழல் தினத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

உலக சுற்றுப்புற தினத்திலாவது உலகம் எத்தகைய நிலையை அடைந்துள்ளது என்பதை நினைத்து பாருங்கள்.

உலக சுற்றுப்புற தினத்திலாவது உலகம் எத்தகைய நிலையை அடைந்துள்ளது என்பதை நினைத்து பாருங்கள்.

இன்று (ஜூன் 5) உலகம் முழுவதும் சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1972ஆம் ஆண்டு முதல் 45 வருடங்களாக கொண்டாடப்பட்டு வரும் இந்த தினத்தில் உலகத்தையும், அதன் இயற்கை அழகையும் காப்பாற்ற, மக்கள் தனது சுற்றுப்புறத்தில் செய்ய வேண்டிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது முக்கிய நோக்கமாகும். உலகின் இயற்கை வளம் அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் தற்போது ஏராளமான பொதுநல அமைப்புகள் உலகம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் எப்படி பட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் அது பயனளிக்காமேலே உள்ளது. பெரும்பாலும் மக்கள் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு சுயநலமாக மாறிவிட்டனர்.  தன்னை காப்பாற்றி கொள்ளவும், தன்னுடைய குடும்பம், பிள்ளைகளை காப்பாற்றவும் பணம் என்ற காகிதத்தை தேடி கடிவாளம் கட்டிய குதிரை போன்று ஓடி கொண்டிருக்கிறான். அப்படி இருக்கையில் என்னதான் மேடை போட்டு மைக் செட் அமைத்து அவன் காதிலே இறங்கி சொன்னாலும் செவிடன் காதில் சங்கு ஊதியது போலத்தான்.

தற்போது உலகம் தன்னுடைய இயற்கை அழகை இழந்து விட்டது. இதற்கு உலகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனிதனே காரணமாக அமைகிறான். அறிவை வளர்க்கிறோம், தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறோம் என்று பூமியை தோண்டி தோண்டி பூமியின் மறு பக்கத்தை விரைவில் அடைந்து விடுவான். இதன் விளைவாக நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களும் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகின்றன. தற்போது விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் மையமாக திகழ்கிறது.

இதனால் குப்பைகள், கழிவுகள் அனைத்திலும் பிளாஸ்டிக் மட்டுமே இருக்கிறது. இத்தகைய பிளாஸ்டிக் இறுதியாக கடலில் கலந்து அதனை உண்ணும் மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் முழுவதும் உயிரிழந்து வருகிறது. இதனை உண்ணும் மனிதர்களுக்கும் அதோ கதி தான். நிலங்களை அழித்து நகரம், தொழிற்சாலைகள் போன்றவற்றை உருவாக்கி சுற்றுசூழல் மாசுபாட்டை அதிகரிக்க செய்தது போதாதென்று காடுகள், மலைகளில் இருக்கும் மரங்களையும் கணக்கில்லாமல் வெட்டி எப்போதாவது பெய்யும் மழையையும் குறைத்து வருகிறான்.

இப்போது நாம் எத்தகைய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். இப்படியே போனால் எதிர்கால சந்ததியினர் நிலைமை யோசித்து பார்க்கவே கடினமாக உள்ளது. தங்களுடைய குழந்தைகளுக்கு பணம், சொத்து போன்றவற்றை சேர்த்து வைப்பதை விட நல்ல சுற்றுசூழலை உருவாக்க முயலுங்கள். நாம் தற்போது வாழும் சுற்றுசூழலை அபாய கட்டத்தை எப்போதோ தாண்டி விட்டது. காலம் தாழ்த்தாமல் வாரத்திற்கு ஒரு மரங்களையாது நட்டால் வருடத்திற்கு 48 மரங்களை நட்டு இழந்த நம்முடைய இயற்கை அழகை மீட்டு விடலாம்.

தற்போது உலகம் முழுவதும் தொழிற்சாலைகளின் ஆதிக்கமும் அதிகமாகி விட்டது. நமது இந்தியாவில் சொல்லவே தேவை இல்லை. தற்போது தொழிற்சாலை அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தொழிற்சாலைகளினால் தண்ணீர் தட்டுப்பாடு, சுற்றுசூழல் மாசுபாடு போன்றவை நிகழும் என்பதை அறிந்தும் மாசு கட்டுப்பாடு வாரியமும், அரசாங்கமும் மக்களின் மீது அக்கறை இல்லாமல் தொழிற்சாலைகளை மேம்படுத்த ஒப்புதல் அளித்து வருகிறது.

நம் தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட்டை மூட 100 நாட்களை கடந்து போராட வேண்டியிருந்தது. ஆனாலும் அரசாங்கமும் சரி, பிரபலங்களும் சரி, சமூக வலைத்தளத்தில் மட்டுமே கருத்து தெரிவித்து வந்தனர். இத்தகைய செயல்கள் மூலமாவது மக்கள் அரசாங்கத்தையும், பிரபலங்களையும் நம்பியிருக்காமல் உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளுங்கள். முடிந்தவரை இயற்கையையும், விவசாயத்தையும் காப்பாற்ற முயலுங்கள். எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ வழிவகை செய்யுங்கள்.

உலக சுற்றுசூழல் தினத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை