ads
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Aug 13, 2018 15:42 ISTWorld News
அமேரிக்கா மாநிலங்களில் ஒன்றான அலாஸ்கா கனடாவிற்கு அருகே அமைந்துள்ளது. இம்மாநிலத்தில் எண்ணெய் கிணறுகள் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று வடக்கு அலாஸ்கா பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 6.4ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலுக்கடையில் ஏற்பட்ட நில அதிர்வால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் காணப்படுகின்றன. 6.4 அளவு கொண்ட இந்த கடுமையான நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியுள்ளது. இந்நிலநடுக்கத்தில் பல பகுதிகளில் கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.