ads
தாய்லாந்தில் புத்தருக்கு மரகத சிலை அமைப்பதாக நன்கொடை திரட்டி 5கோடி மோசடி
விக்னேஷ் (Author) Published Date : Aug 10, 2018 15:08 ISTWorld News
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தாய்லாந்து நாட்டின் முன்னால் புத்த துறவியான வைராபான் சுக்பான் என்பவர் திருமணமாகாத பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு அமெரிக்காவிற்கு தப்பி சென்றார். இதனை அடுத்து இவர் மீது போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியான. இந்த விசாரணை மூலம் புத்தருக்கு மரகத சிலை செய்வதாக கூறி கொடையாளர்களிடம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் 4கோடி குவித்து ஏமாற்றியுள்ளார்.
இது தவிர பல மோசடிகளில் ஈடுபட்டுள்ள புண்ணியவான், புத்த துறவி என்ற பெயரில் ஏராளமான சொகுசு கார்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதன் பிறகு இவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்திற்கு வரவழைத்து அவர் மீது பணமோசடி புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 114 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாங்காக் கோர்ட் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. இது தவிர புத்தருக்கு சிலை அமைத்தாக கூறி ஏமாற்றப்பட்ட 5 கொடியையும் திருப்பி தரவேண்டும் என்றும் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு வழக்கு குறித்த தீர்ப்பு வரும் அக்டொபர் மாதத்தில் வழங்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.