ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு

rk nagar election result

கடந்த சில நாட்களாகவே சென்னை ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் காரணத்தினால் அரசு மற்றும் அரசியல் சார்ந்த நபர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது. இந்த இடைத்தேர்தலில் பலரும் வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர். இதில் சிலர் இடைத்தேதலில் இருந்து நிராகரிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 21ம் தேதி ( 21.12.17) இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் பலத்த பாதுகாப்புடன் சிசிடிவி கேமராக்களை பொருத்தப்பட்டு நடைபெற்றது.   சென்னை கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை பெட்டிகளை பலத்த பாதுகாப்புடன் கண்காணித்து வருகின்றனர். ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ராணி மேரி கல்லூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை பெட்டிகளை கொண்ட அறை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதோடு, துணைராணுவ படையினர் மற்றும் சென்னை மாநகர காவல்துறை உட்பட 3 அடுக்கு பாதுகாப்பு படைகளை கொண்டு கண்காணித்து வருகின்றனர்.இந்த பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்யும் விதமாக தேர்தல் ஆணையர் அதிகாரி கார்த்திகேயன், மாநகர காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் உட்பட பொதுப் பார்வையாளர்கள் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பின்னர்  தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் ஆலோசனை மேற்கொண்டதிற்கு பின்னர் 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.       


ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு