ads
மனுஷி சில்லார், இந்தியா - உலக அழகி, 2017
புருசோத்தமன் (Author) Published Date : Nov 18, 2017 23:20 ISTWorld News
இந்தியா
பெண்களுக்கான உலக அளவில் நடத்தப்படும் போட்டிகளில் உலக அழகி போட்டியும் ஒன்றாகும். உலகில் உள்ள பல நாடுகளிருந்து அந்நாட்டின் சார்பாக பல பெண்கள் இந்த போட்டியில் கலந்துக்கொள்கின்றனர். எரிக் மோர்லேயால் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த போட்டி இன்றுவரை நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. பெண்களின் அழகையும், திறமையும் கொண்டு போட்டியின் வெற்றியை நிர்ணையிக்கப்படுகிறது.
2017 ஆம் ஆண்டுக்கான போட்டி, சீனாவில் உள்ள சன்யா சிட்டி அரீனா என்னும் இடத்தில் நடத்தப்பட்டது.118 நாடுகள் இந்த போட்டியில் பங்குபெற்றனர். உலக அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியில், இந்தியாவின் சார்பில் கலந்துக்கொந்த ஹரியானவை சேர்ந்த மனுஷி சில்லார் என்பவர், 2017 ஆம் ஆண்டுக்கான உலகஅழகி பட்டத்தை வென்றுள்ளார். மெக்ஸிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மேசா இரண்டாம் இடத்தையும், இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டெபினி ஹில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார். சீனாவில் நடத்தப்பட்ட இப்போட்டியில், சீனா சார்பில் கலந்துக்கொந்த கவுன் சியூ என்பவர் முதல் 40வது இடத்தை பிடித்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு பிறந்த மனுஷி சில்லார், மருத்துவ மாணவியான இவர், பெமினா மிஸ் இந்தியா 2017 பட்டத்தை வென்றுள்ளார். இந்தியாவிற்கு 2017ம் ஆண்டு கிடைத்த வெற்றி 6வது முறையாகும். 1966 ஆம் ஆண்டு ரெய்ட்டா ப்ர்யா, 1994ல் ஐஸ்வர்யா ராய், 1997ல் டயானா ஹேடன், 1999ல் யுக்தா முகி, 2000ம் ப்ரியங்கா சோப்ரா போன்றவர்கள் இந்தியாவின் சார்பாக கலந்துக்கொண்டு வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது