ads
இன்று ஆப்ரகாம் லிங்கன் பிறந்த தினம்
வேலுசாமி (Author) Published Date : Feb 12, 2018 17:31 ISTPolitics News
World News
ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவரான ஆப்ரகாம் லிங்கன் பிறந்த தினம் இன்று. இவர் அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடிமை முறையை ஒழிக்க முன்வந்தவர்களில் இவரும் ஒருவராவார். இவர் 1860-ஆம் ஆண்டு மேற்கு மாநிலத்தின் தலைவராக இருந்துள்ளார். பின்னர் இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் ஐக்கிய அமெரிக்காவை பிளவுபடாமல் காப்பதற்காக தென்மாநில பிரிவினையின் கருத்தாளர்களை எதிர் கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர்.
இவர் 1863 ஆம் ஆண்டில் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பை வெளியிட்டார். இதனை தொடர்ந்து 1865-ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத்திருத்தத்தின் படி அடிமை முறையை ஒழித்தார். இவருடைய பண்புகளில் இவர் நடத்திய உள்நாட்டுப் போர், மற்றும் இவர் நாட்டு மக்களுக்கு அடிமை முறையை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் எழுப்பிய குரலும் முக்கியமானவை. 'கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு' என்ற புகழ்பெற்ற உரை இவருடைய சொற்பொழிவிற்கு நல்ல எடுத்துக்காட்டு. மேலும் உள்நாட்டுப் போர் முடியும் தருவாயில் தென் மாநிலங்களுடன் கடுமையாக இல்லாமல் அமைதியான முறையில் அமெரிக்க ஒன்றியத்தை நிறுவ முயன்றார்.
இவர் அடிமை முறையை ஒழிப்பதில் ஒரு சிறிதும் தளர்வில்லாமல் உறுதியாக இருந்ததை ஒரு சிலர் கடுமையாக எதிர்த்தனர். மற்றொரு சிலர் இவர் போதிய முயற்சியுடன் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்றும், அடிமை முறையை போற்றிய தென் மாநிலங்களிடம் உள்நாட்டுப்போரின் இறுதியில் போதிய அளவு கடுமையாக நடந்துகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இறுதியாக இவர் 1865-ஆம் ஆண்டு வாஷிங்டன் டிசியில் உள்ள வோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார்.