ads
சீனாவில் தற்கொலை எண்ணத்தை தடுக்க புதிய செயலி
வேலுசாமி (Author) Published Date : Feb 08, 2018 16:34 ISTWorld News
Technology News
நாளுக்கு நாள் புதிய தொழில் நுட்பத்தை கையாண்டு வரும் சீனாவில் தற்கொலை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக தற்போதுவரை இருந்து வருகிறது. முக்கியமாக 15 லிருந்து 34 வயதுடையோர் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய செயல்களை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது அதன் முதற்கட்டமாக புதிய செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த செயலி மூலம் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பதிவிடும் கருத்துகளை ஸ்கேன் செய்து அவர்களின் மனக்கஷ்டங்களை புரிந்து கொள்ளும். அதன்படி தற்போது 20 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மேல் இது குறித்த தகவல் அனுப்பட்டது. தற்கொலை எண்ணம் உள்ள கிட்டத்தட்ட 4 ஆயிரம் மக்கள் அந்த தகவலுக்கு பதில் அளித்துள்ளனர். மேலும் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அந்த தகவலிலுள்ள ஆலோசனை கருவியை பயன்படுத்தியது அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சீன வல்லுனரான சூ டிங்ஷா இந்த அமைப்பை உருவாக்கியுள்ளார். இது குறித்து இவர் அளித்த அறிக்கையில், ' தற்கொலை எண்ணம் மனிதர்களுக்கு வரும் போது வித்தியாசமான கருத்துகளை பதிவு செய்வார்கள். ஆனால் சிலருக்கு இந்த பிரச்சனை இருப்பது தெரியாது. இந்த நிலையில் அவர்கள் இணையதளம் அதிகமாக பயன்படுத்துவது அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும்.
தற்போது இந்த செயலி தற்கொலை எண்ணம் கொண்ட நபர்களுக்கு மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்தும் மக்களுக்கும் அதிகமாக பயன்படும்.இந்த செயலியின் மூலம் இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கி தற்கொலை எண்ணத்தை தடுப்பது வழக்கமான முறையாகும். ஆனால் 20 சதவீதம் மக்களுக்கு மட்டுமே இது பயன்படும். சமூக வலையத்தளம் மூலம் தற்கொலை எண்ணம் கொண்ட மக்களுக்கு ஆலோசனை வழங்குவது நல்ல பலனை கொடுக்கும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.