ads
தீபா வீட்டிற்குள் புகுந்த போலி வருமான வரித்துறை அதிகாரியை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
வேலுசாமி (Author) Published Date : Feb 10, 2018 17:06 ISTPolitics News
இந்தியா
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னையில் உள்ள தி நகர் சிவஞானம் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 7 மணிவேலையில் மர்மநபர் ஒருவர் தீபா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தீபா மற்றும் அவரின் கணவர் மாதவன் ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர். பின்னர் தீபாவிடம் அந்த நபர் எனது பெயர் மிதேஷ்குமார், வருமான வரித்துறையில் உதவி கமிஷனராக இருக்கிறேன், உங்கள் வீட்டில் வருமான வரி சோதனைக்காக வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து தீபாவின் கணவர் மாதவன் அவரின் வக்கீலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த வக்கீல் நீங்கள் ஒருவர் மட்டும் தான் வந்தீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் காலை 10 மணிக்கு பிறகு மற்ற அதிகாரிகள் வருவார்கள். வீட்டில் இருந்து யாரும் பொருட்களை வெளியில் எடுத்து செல்லாமல் இருக்க கண்காணிப்பதற்காக என்னை அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். பின்னர் அவரது நடவடிக்கையில் வக்கீலுக்கு சந்தேகம் ஏற்பட உடனே மாம்பலம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அளித்த சற்று நேரத்திற்குள் 50 கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிந்துள்ளனர். அதன் பிறகு அந்த நபர் போலீசார் வந்திருப்பதை அறிந்து அருகில் உள்ள டீக்கடைக்கு செல்கிறேன் என்று மழுப்பி வெளியேற முயன்றுள்ளார். ஆனால் அந்த நபரை வெளியேற விடாமல் அங்கிருந்தவர்கள் தடுத்துள்ளனர். பின்னர் வீட்டின் மதில் சுவர் வழியாக ஏறி குதித்து அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
இதனை அடுத்து வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போலீசார் அந்த நபரை துரதியுள்ளனர். ஆனால் அவர் போலீசாரின் சிக்காமல் தப்பித்துள்ளார். தற்போது அந்த மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்த மர்ம நபர் எதற்காக தீபா வீட்டிற்கு வந்தார், சமீபத்தில் தீபா மீது 1 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
அதற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடி தலைமறைவான அந்த நபரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நபரின் புகைப்படம் மற்றும் அடையாள அட்டை சிக்கியுள்ளதால் அதன் மூலம் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.