ads

இன்று நமது நாட்டின் 69வது குடியரசு தினவிழா

india 69th republic day

india 69th republic day

இன்று இந்திய அரசியலமைப்பு சட்டம் செயல்முறைக்கு வந்த நாளாகும். இதனால் இந்த நாள் முக்கிய விடுமுறைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது நாட்டின் 69வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு அணிவகுப்பினை பார்வையிட்டு வருகிறார். நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள ராஜபாதில் நடைபெறும் அணிவகுப்பில் விருந்தினர்களாக தென்கிழக்கு ஆசிய நாட்டு சங்கத்தின் 10 தலைவர்களுடன் கலந்து கொண்டுள்ளார். இந்த அணிவகுப்பு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களின் தலைமையில் நடந்து வருகிறது.

வரலாறு :

கடந்த 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினரின் விடுதலை முழக்கங்களை நினைவு கூறும்வகையில் ஜனவரி 26 ஆம் நாள் விடுதலை நாளாக மகாத்மா காந்தி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் கிராமங்களிலும் நகரங்களிலும்  உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் பரிந்துரை செய்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

"பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."

28 ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் 1947 ஆண்டு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக டாக்டர் பிஆர் அம்பேத்கர் அவர்கள் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பை 1947 நவம்பர் 4 ஆம் தேதி அரசியமைப்பு சட்ட அவையில் சமர்ப்பித்தது. இறுதியாக ஜனவரி 24 ஆம் தேதி 1950-ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. இதனை அடுத்து இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில், விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாடுவதற்கு நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது. 1950-ஆம் ஆண்டு முதல் இந்த நாள் குடியரசு தினமாக அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது ஏராளமான மக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

india 69th republic dayindia 69th republic day
india 69th republic dayindia 69th republic day
india 69th republic dayindia 69th republic day
india 69th republic dayindia 69th republic day
india 69th republic dayindia 69th republic day
india 69th republic dayindia 69th republic day
india 69th republic dayindia 69th republic day

இன்று நமது நாட்டின் 69வது குடியரசு தினவிழா