ads

நாளை முழு சந்திர கிரகணம்

chandra grahan in india

chandra grahan in india

முழு சந்திர கிரகணம் நாளை (31-01-2018) நிகழ்கிறது. கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு பிறகு மூன்று  நிகழ்வுகள் ஒரே தேதியில் நடக்கும் அரிய நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. பூமியானது சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஒரே நேர்கோட்டில் இந்த மூன்றும் வரும்போது, முழுமையான சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. இது, இந்த மாதத்தின் இரண்டாவது பெளர்ணமி ஆகும். அந்த நேரத்தில், சந்திரன் நீல நிறத்தில் வண்ணமயமாக காட்சி அளிக்கும். இதனால் இந்த சந்திரன் ‘புளு மூன்’ என்று அழைக்கப்படுகிறது.

சந்திரன் தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோற்றம் தான் இந்த நிகழ்வின் சிறப்பு. அதாவது, கீழ்வானத்தில் சந்திரன் எழும்போதே மாலை 6:25 மணியளவில் முழு சந்திர கிரகணம் தொடங்க உள்ளது. இந்த முழு சந்திர கிரகணம் இரவு 7:25 மணிவரை நீடிக்கும். பின்னர் பூமியின் நிழல் படிப்படியாக குறைந்து, சந்திரன் இயல்புநிலையை அடைந்து விடும். சூரிய ஒளியானது நிலாவின் மீது இந்த சந்திர கிரகணத்தின்போது நேரடியாக விழாது. ஆனால், வளிமண்டலங்களில் சிதறடிக்கப்படும் ஒளி, சந்திரன் மேல் விழும். குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர் வளி மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் சந்திரனை அடைகின்றது. இதனால், சிவந்த சந்திரனாக தோன்றும். இது நிகழ்வு ‘பிளட் மூன்’ என்று அழைக்கப்படும் இரண்டாவது நிகழ்வாகும்.

கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது. மேலும் இந்த மூன்றாவது அரிய நிகழ்வு ‘சூப்பர் மூன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்திரன் பூமியை சுற்றி வரும்போது மாதத்தில் ஒரு முறை மட்டும் பூமியை மிகவும் நெருங்கி வரும். அப்போது சந்திரன் வழக்கத்தைவிட பெரியதாக காட்சியளிக்கும். இந்த அரிய நிகழ்வும், முழு சந்திர கிரகணத்தின்போதே நடக்கிறது. வழக்கத்தை விட 10 சதவீதம் பெரிய வடிவமாக சந்திரன் காட்சி அளிக்கும் என்றும் சற்று பிரகாசமாகவும் இருக்கும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்த நேரங்களில் கடல் மற்றும் ஆறுகளில் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும். ஆனாலும் பயப்படும் அளவுக்கு விளைவு ஏதும் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த முழு சந்திர கிரகணம் நாடு முழுவதும் காட்சியளிக்கும். வெறும் கண்களாலே இதனை பார்க்கலாம். தொலைநோக்கி மூலமாகவும் இதை காணலாம். முழு சந்திர கிரகணம் நிகழும் நேரத்தில் உண்ணக்கூடாது என்று கூறப்படும் நம்பிக்கைக்கு அறிவியல் அடிப்படை என்று எதுவும் இல்லை என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

நாளை முழு சந்திர கிரகணம்