ads
தீவிரமடையும் பேருந்து கட்டண உயர்வு போராட்டம்
வேலுசாமி (Author) Published Date : Jan 24, 2018 15:26 ISTPolitics News
இந்தியா
தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து கட்டண உயர்வால் மாணவ மாணவிகள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் போன்ற அனைத்து தரப்பு மக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த பேருந்து கட்டணம் 60 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. மதுரையில் மாணவர்கள் தமிழக அரசிற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெரும்வரை போராட்டம் நாள்தோறும் நடக்கும் என்றும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்படைந்ததை அடுத்து போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் 300 கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து தருமபுரி, அரியலூர் போன்ற பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயம்பத்தூரில் அரசு கல்லூரி மாணவர்கள் தமிழக அரசை எதிர்த்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மாணவர்கள் அதையும் மீறி சாலை மறியலில் ஈடுபட்டதால் 100 கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து 2 வேன்களில் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் தமிழக அரசிற்கு எதிராக போடப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வில் தலையிடமுடியாது என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
சமீபத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ், தமிழக அரசிற்கு எதிராக "விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கமுடியாத பேருந்துகட்டண உயர்வு சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்." என்று தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் கமல் ஹாசன் தனது டிவிட்டரில் "பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே!" என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசிற்கு எதிராக பல்வேறு மீம்ஸ்களை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் தெறிக்க விடுகின்றனர் நெட்டிசன்கள்.
பஸ௠கடà¯à®Ÿà®£ உயரà¯à®µà¯ˆ à®à®´à¯ˆà®•à®³à®¿à®©à¯ அரசாஙà¯à®•à®®à®¾à®• இரà¯à®¨à¯à®¤à®¾à®²à¯ தடà¯à®•à¯à®• ஆவனவெலà¯à®²à®¾à®®à¯ செயà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯. à®®à¯à®Ÿà®¿à®µà¯†à®Ÿà¯à®¤à¯à®¤à¯à®µà®¿à®Ÿà¯à®Ÿà¯ கரà¯à®¤à¯à®¤à¯ கேடà¯à®ªà®¤à¯ அரசியல௠சாதà¯à®°à¯à®¯à®®à¯. à®®à¯à®©à¯à®ªà¯‡ கேடà¯à®Ÿà®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯ நலà¯à®² நிவாரணம௠சொலà¯à®²à¯à®®à¯ வலà¯à®²à¯à®©à®°à¯à®•à®³à¯ அரசà¯à®ªà¯ பணியிலேயே உளà¯à®³à®©à®°à¯. அரசாளà¯à®ªà®µà®°à¯ கேடà¯à®Ÿà®¾à®²à¯à®¤à®¾à®©à¯‡!
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2018