ads

மனிதரின் குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகள் உருவாக்கி சாதனை

new ears grown from human own cells

new ears grown from human own cells

ஏராளமான குழந்தைகளுக்கு காதின் வெளிப்புறம் வளர்ச்சி அடையாமல் இருக்கும். இந்த குறைபாடு 'மைக்ரோசியா (Microtia)' என்று அழைக்கப்படுகிறது. இந்த குறைபாட்டால் ஒலியின் சத்தத்தையும், மற்றவர்கள் பேசுவதையும் தெளிவாக கேட்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த குறைபாட்டை சரிசெய்வதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. ஆனால் அத்தகைய முயற்சிகள் பலனளிக்காமல் போனது. முன்னதாக வேறு ஒருவரின் செல்களில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு புதிய காது அளிக்கும் சிகிச்சை நடைபெற்றது. அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் பாதிக்கப்பட்டவரின் குருத்தெலும்பு செல்களை (Cartilage cells) வைத்து புதிய காதுகள் வழங்கும் முயற்சிகள் கையாளப்பட்டது. தற்போது இந்த முயற்சியை வெற்றிகரமாக முடித்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

உலகத்தில் முதன் முறையாக ஒருவரின் செல்களை வைத்து புதிய காதுகளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இந்த முயற்சியில் முதலில் குறைபாடுடைய காதின் மறுபுறம் உள்ள காதை வைத்து சிடி ஸ்கேன் (CT Scan) மற்றும் '3D-printed framework' எனப்படும் முறையில் புதிய காதுகள் உருவாக்கி அதற்கு செல்கள் மாற்றப்பட்டது. பின்னர்  இதனை பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தி சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளபட்டது. இந்த முறையை பயன்படுத்தி சீனாவில் தற்போது 5 குழந்தைகளுக்கு புதிய காதுகளை உருவாக்கி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த உயிரியல் தொழில் நுட்ப முறையானது பழையதாக இருந்தாலும் முதன் முதலாக தற்போது வெற்றியை சந்தித்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு முன்னதாக எலிகளுக்கு மனிதனின் குருத்தெலும்பு செல்கள் பொருத்தி புதிய காதுகள் பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. 

new ears grown from human own cellsnew ears grown from human own cells

மனிதரின் குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகள் உருவாக்கி சாதனை