ads

பின்னுக்கு தள்ளப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். photo credit @billgates

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். photo credit @billgates

உலகளவில் மிக பெரிய பணக்காரர்களில் முதலிடத்தை தக்கவைத்து கொண்டவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர் யார் என்று பலர் மறந்து இருந்தாலும் பில் கேட்ஸ் அவர்களை மறப்பதற்கு சாத்தியம் குறைவு. தனது கடின முயற்சியால் உலக பணக்காரர்களில் முதல் இடத்தில இருந்தார்.மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து தனது பதவியை துறந்தாலும், அவர் முதலிடத்தில் தான் இருந்தார். 

வருடாவருடம் சீனாவை சேர்ந்த ஹுயூரன் குளோபல் ரிச் லிஸ்ட் 2018 (Hurun Global Rich List 2018) அறிக்கையில், அமெரிக்காவை சேர்ந்த 7 தொழில் அதிபர்கள் முதல் 10 இடத்திலும் , மீதம் உள்ள 3 இடங்களில் மற்ற நாட்டினர் உள்ளனர்.

முதல் இடத்தில், அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெப் பீசோஸ் (jeff bezos), அமேசான் நிறுவனம் இணையதள வர்த்தக சேவையிலும், திரைத்துறை சார்ந்த இணையதளத்திலும் மற்றும் பல்வேறு தொழில்களிலும் தங்களது சேவையை உலகில் உள்ள அணைத்து நாடுகளிலும் செயலாற்றி வருகிறது.

இரண்டாம் இடத்தில், அமெரிக்காவை சேர்ந்த பெர்க்ஷிர் ஹேத்துவே நிறுவனத்தின் அதிபர் வாரன் பபெட் (Warren Buffett) உள்ளார்.

மூன்றாம் இடத்தில், அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிபர், தற்பொழுது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் டெக்னாலஜி அட்வைசராக இருக்கும் முன்னாள் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த திரு பில் கேட்ஸ் அவர்கள் தற்பொழுது மூன்றாம் இடத்திற்கு தள்ள பட்டுள்ளார். இதற்கு காரணம் பல நிறுவனங்களின் அதிக வளர்ச்சியும், இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்து தனது மனைவியுடன் சேர்ந்த தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் செயல்பட்டதே காரணம்.

நான்காவது இடத்தில், மக்கள் இன்று பெரிதளவு நேரத்தை வீணடிக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க். மக்களின் பொழுதுபோக்கையும் தேவைகளையும் எந்த அளவு தொழிலாக்க முடியும் என்று அறிந்ததினால் இவர் நான்காம் இடத்தில் உள்ளார்.

பின்னுக்கு தள்ளப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்