ads
நிபா வைரஸால் கேரளாவில் வீழ்ச்சியடைந்த சுற்றுலா பொருளாதாரம்
வேலுசாமி (Author) Published Date : May 23, 2018 16:55 ISTBusiness News
இந்தியாவின் தென் மாநிலங்களுள் பசுமை நிறைந்த, செழிப்புடன் கூடிய மாநிலமான கேரளா, சுற்றுலா தளங்களும், அதன் இயற்கை அழகு நிறைந்த சிறப்புகளும் சுற்றுலா வாசிகளை கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர் வருகையால் சுற்றுலா பொருளாதாரம் உயர்ந்து வருகிறது.
கேரளாவில் தேக்கடி, பெரியார் தேசியப் பூங்கா, மூணார், வயநாடு, ஆலப்புழாவின் கட்டு வள்ளம்,கொச்சி மற்றும் கொல்லம் போன்ற இடங்கள் சுற்றுலா தளங்களும், சபரிமலை, ஆற்றுக்கால் பகவதி கோவில், சோட்டானிக்கரை பகவதி கோயில், ஆறு அய்யப்பன் கோயில்கள்,மீன்குளத்தி பகவதி கோயில்,குருவாயூர் குருவாயூரப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோவில் ஆன்மீக தளங்களும் கேரளாவில் சிறப்பு வாய்ந்தவை.
இது தவிர இயற்கை மருத்துவத்திலும் கை தேர்ந்த இம்மாநிலம் தற்போது வெகுவாக பரவி வரும் நிபா வைரஸால் சுற்றுலா பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் கேரளாவிற்கு செல்வதற்காக புக்கிங் செய்யப்பட்ட ஹோட்டல், ரயில் டிக்கெட் மற்றும் விமான டிக்கெட் போன்றவற்றை கேன்சல் செய்துள்ளனர். இதனால் கேரளாவின் சுற்றுலா பொருளாதாரம் தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மேலும் கேரளாவில் வெகுவாக பரவி வரும் நிபா வைரஸால் ஏராளமான உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளது. இதனால் சுற்றுலா வாசிகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். பறக்கும் வெளவால்கள் மூலம் பரவும் இந்நோயால் தற்போது 27பேர் உயிரிழந்துள்ளனர். வெளவால்கள் சாப்பிட்ட பழங்களை சாப்பிடுவதன் மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ மனிதர்களை உடனடியாக தாக்குகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த விழிப்புணர்வுகளும், சிறப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.