ads
சேலத்தில் இருந்து சென்னை செல்ல ரூபாய் 1499 மட்டுமே
புருசோத்தமன் (Author) Published Date : Mar 11, 2018 21:25 ISTBusiness News
சேலத்தின் விமான போக்குவரத்துக்கு சேவை மூலம் வரும் மார்ச் 25-ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து சென்னை வரை விமான சேவை துவங்கவுள்ளது. ட்ருஜெட் (Truejet) எனும் தனியார் நிறுவனம் மார்ச் 27-ஆம் தேதி முதல் பயணிகளுக்கான இதற்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளது. ட்ருஜெட் (Truejet) நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் முக்கியமான நகரங்களில் மிக குறைந்த விலையில் அனைவரும் பறக்கலாம் என்று கொள்கையில் தனது விமான போக்குவரத்து கட்டணத்தை ரூபாய் 718 வரை குறைந்த பட்ச கட்டணமாக வைத்துள்ளது.
25-மார்ச்-2018 முதல் நாள் என்பதால் இன்றைய தேதிப்படி சேலம் டு சென்னை செல்வதற்கான கட்டணம் ரூபாய் 11999 என்று நிர்ண்யம் செய்யப்பட்டுள்ளது. 25 மற்றும் 26ஆம் தேதிகளில் ட்ருஜெட்டின் இணையத்தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். வரும் 27ஆம் தேதி முதல் கட்டண சலுகையாக ரூபாய் 1499யில் சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லலாம். இதற்கான முன்பதிவை ட்ருஜெட் இணையத்திலும் இதர சுற்றுலா சேவை வழங்கும் நிறுவனங்களான யாத்ரா (Yatra), மேக் மை ட்ரிப் (Make My Trip) போன்ற நிறுவனங்களின் இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் சென்னையில் இருந்து தான் சேலத்திற்கு ட்ருஜெட் விமானம் வந்தடைகிறது. சென்னையில் இருந்து விமானம் புறப்படும் நேரம் காலை 9.50AM. விமானம் புறப்பட்ட ஐம்பது நிமிடங்களில் 10.40AM மணிக்கு சேலத்தை வந்தடைகிறது.
பின்னர் சேலத்தில் இருந்து புறப்படும் நேரம் காலை 11:00AM. இந்த விமானம் புறப்பட்ட ஐம்பது நிமிடங்களில் (50minutes) சென்னைக்கு 11.50AM மணிக்கு சென்றடைகிறது. தற்பொழுது ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே விமான சேவை செயல்பட உள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகமானால் இதர விமானங்கள் அல்லது ட்ருஜெட் விமானமே இரண்டு முறை சேவையை செயல்படுத்தும்.
சேலத்திற்கு அருகில் இருக்கும் மற்ற சர்வதேச விமான நிலையங்கள் திருச்சி மற்றும் கோயம்பத்தூர் போன்ற நகரங்களில் இயங்கி வருகிறது, இந்த சேவை வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் சேலத்தில் இருந்து மற்ற மாநில நகரங்களுக்கும் விமான சேவை துவங்க கூடும். சேலத்தை வசிக்கும் மக்களுக்கு இந்த சேவை பெருமளவில் உதவியாக இருக்கும்.