ads
சாம்சங் நிறுவனத்திடம் ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு தொகையை கேட்டுள்ள ஆப்பிள் நிறுவனம்
விக்னேஷ் (Author) Published Date : May 17, 2018 15:30 ISTBusiness News
தென்கொரியாவின் மிகப்பெரிய மொபைல் தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் 1938 ஆண்டு முதல் 80 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் தனது சேவையினை வழங்கி வரும் இந்நிறுவனத்தில் 5 லட்சம் ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் இறுதியாக வெளிவந்த சாம்சங் நோட் 8, காலக்சி S9+, காலக்சி S9 போன்ற ஆண்டிராய்டு மொபைல்கள் பயனாளர்களை கவர்ந்து வருகிறது. மாதத்திற்கு இரண்டு புதிய மாடல்கள் என வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் கடந்த சில வருடங்களாக கடும் போட்டிகள் நிலவி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம் உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட ஸ்டோர் ரூம்களை கொண்டு 2 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ளது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் எக்ஸ் மாடல் பயனாளர்களை விரைவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் அதாவது 6800 கோடி ரூபாய் இழப்பீடு தொகை தரவேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது.ஏழு வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ள புகாரில் சாம்சங் நிறுவனம் எங்களது 5 காப்புரிமைகளை அப்படியே காப்பி அடித்து பலன் பெற்றுள்ளது. இதனால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்ட சாம்சங் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் தரவேண்டும் என கேட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ள நிலையில், சாம்சங் நிறுவனம் காப்பி அடித்ததை ஒப்பு கொண்டு இழப்பீடு தொகையை 200 கோடி அளவில் குறைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கு குறித்து நீதிபதி அறிவிக்கும் தீர்ப்பிற்கு ஏராளமான மக்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.