ads
மே 1ல் இணையத்தில் லீக்கான சாம்சங் காளக்ஸி ஏ 6 மற்றும் ஏ 6 ப்ளஸ் மாடல்களின் அட்டகாசமான அம்சங்கள்
ராசு (Author) Published Date : May 01, 2018 18:21 ISTTechnology News
சாம்சங் நிறுவனத்தின் காளக்ஸி ஏ 6 மற்றும் ஏ 6 ப்ளஸ் மாடல்கள் தனது சாம்சங் இந்தோனேஷியா இணையத்தளத்தில் முன்னறிவிப்பின்றி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடல்களுக்குப் பெயர்போன சாம்சங் காளக்ஸி ஏ மொபைல் வகைகள் 2014 முதல் விற்பனையில் உள்ளது. காசு அதிகமாக செலவு செய்ய விரும்பாத வாடிக்கையாளர்களை இந்த ஏ வகை மொபைல்கள் பெரிதும் கவர்ந்தன.
இந்நிலையில் மே மாதம் வெளியாக இருந்த ஏ 6 மற்றும் ஏ 6 ப்ளஸ் மாடல்களின் அம்சங்கள் பின்வருமாறு.
காளக்ஸி ஏ 6 தொடுதிரை : 5.6-inch HD+ (1480 x 720) காளக்ஸி ஏ 6 + தொடுதிரை : 6-inch HD+ (2220 x 1080)
காளக்ஸி ஏ 6 முன்பக்க மற்றும் பின்பக்க கேமரா : 16 MP & 16 MPகாளக்ஸி ஏ 6 + முன்பக்க மற்றும் பின்பக்க கேமரா : 16MP/5MP & 24 MP
காளக்ஸி ஏ 6 ரேம், உள்சேமிப்பு மற்றும் வெளிசேமிப்புத் திறன் : 3 GB, 32 GB & 256 GBகாளக்ஸி ஏ 6 + ரேம், உள்சேமிப்பு மற்றும் வெளிசேமிப்புத் திறன் : 4 GB, 32 GB & 400 GB
காளக்ஸி ஏ 6 பேட்டரி திறன் : 3000 mAh காளக்ஸி ஏ 6 + பேட்டரி திறன் : 3500 mAh
64 பிட் ஆக்டா கோர் பிராஸசரைக் கொண்டுள்ள இந்த மொபைல்களில் பிக்ஸ்பை என்ற மெய்நிகர் உதவியாளர் அம்சம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்,பயன்படுத்துவோர் கேட்கும் கேள்விகளுக்கு மொபைலால் உரிய பதிலைத் தெரிவிக்க இயலும். மேலும் இவை ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயக்க முறைமையுடன் செயல்படும். இதன் விலைகள் முறையே ரூபாய் 29,000 மற்றும் 32,000 ஆக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனினும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவுப்பு இன்னும் வெளியாகவில்லை.