ads
20 நாடுகளுக்கு இலவச அழைப்புகள் இன்டர்நெட் பேக் வழங்கும் வோடாபோனின் புதிய ரோமிங் பிளான்
விக்னேஷ் (Author) Published Date : May 25, 2018 12:22 ISTBusiness News
இந்தியாவின் எட்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன், 1991ஆம் ஆண்டு முதல் 26 ஆண்டுகளாக தனது வாடிக்கையாளர்களுக்கு டெலிகாம் சேவையை அளித்து வருகிறது. உலகம் முழுவதும் தனது சேவையை அளித்து வரும் வோடபோன் லண்டன் மற்றும் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டது. இந்தியாவில் மட்டும் வோடபோன் சேவையினை 212.52 மில்லியன் மக்கள் உபயோகித்து வருகின்றனர்.
வோடபோன் டெலிகாம் சேவை பெரும்பாலும் ஏர்செல் வீழ்ச்சிக்கு பிறகு கிராமங்களில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இதனால் தற்போது தனது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையினையும் வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது புதிய இன்டர்நெஷனல் ரோமிங் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் ரூபாய் 180க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ஐக்கிய நாடுகள், ஐரோப்பா, அமேரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா மற்றும் நியூசிலாந்து போன்ற 20 நாடுகளுக்கு இலவசமாக ஆலிமிடேட் வாய்ஸ் கால் மற்றும் இலவச டேட்டாவை ஒரு நாளைக்கு பெறலாம். மேலும் 180 ருபாய் திட்டத்தின் மூலம் ஒரு நாள் மற்றும் 500 ரூபாய் திட்டத்தின் மூலம் 28 நாட்கள் என புதியதாக தனது திட்டத்தினை மேம்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள ஏராளமான பயனாளர்கள் பயன்பெறும் வகையில் வோடபோன் இந்த புதிய திட்டத்தினை வாடிக்கையாளருக்கு அறிமுகம் செய்துள்ளது.