ads
ப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கிய வால்மார்ட்
வேலுசாமி (Author) Published Date : May 10, 2018 10:24 ISTBusiness News
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வார்த்தக தளங்களில் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தியாவை சேர்ந்த பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ப்ளிப்கார்ட் நிறுவனம் கடந்த 2007ஆண்டு முதல் தற்போதுவரை 11 வருடங்களாக வர்த்தக சேவையை பொது மக்களுக்கு அளித்து வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அமேசான் கடந்த 2013முதல் 5 வருடங்களாக இயங்கி வருகிறது.
இதற்கு முன்பு ஜங்கிலீ.காம் என்ற பெயரில் 1998ஆண்டு துவங்கப்பட்டு போதிய வரவேற்பை பெறாத நிலையில் கடந்த 2017இல் அமேசான்.காம் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. உலகம் முழுவதும் தனது சேவையினை அளித்து வரும் அமேசான் இந்தியாவை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைத்து ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஆர்வம் செலுத்தி வந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக விளங்கி வரும் வால்மார்ட் நிறுவனம் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.
இதற்கான இறுதி ஒப்பந்தம் நேற்று நிறைவடைந்ததாக சாப்ட் வங்கி தலைமை அதிகாரி மாசாயோஷி தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம் சர்வதேச அளவில் அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் வால்மார்ட் நிறுவனம் இந்தியாவிலும் அமேசானுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. வால்மார்ட் நிறுவனம் உலகம் முழுவதும் 11,718 கிளைகளை கொண்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 1.3 மில்லியன் மக்கள் பணிபுரிகின்றனர்.