ads

மத்திய அரசின் ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

நடந்து முடிந்த ஐஏஎஸ் தேர்வின் முடிவுகள் இன்று இரவு வெளியிட உள்ளனர்

நடந்து முடிந்த ஐஏஎஸ் தேர்வின் முடிவுகள் இன்று இரவு வெளியிட உள்ளனர்

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தேர்வாணையம் பல துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப  தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் இருந்து மாணவர்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு போன்றவற்றின் மூலம் தேர்ந்தெடுத்து வருகின்றனர். நாட்டின் பல துறைகளில் உள்ள பணியிடங்களுக்காக இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் தேர்வுகளில் கலந்து கொள்கின்றனர்.

தற்போது கல்லூரி முடித்த பட்டதாரி இளைஞர்கள், வேறு பணியில் இருக்கும் பொது மக்கள் என பலதரப்பட்ட மக்கள் இந்த தேர்வுகளில் விண்ணப்பித்து கலந்து கொள்கின்றனர். நாட்டில் தற்போது நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தினால் பெரும்பாலான மாணவர்கள் இதுபோன்ற தேர்வுகளையே நம்பியுள்ளனர்.

மத்திய அரசு தேர்வாணையம் கடந்த ஆண்டு நவம்பரில் ஐஏஎஸ் அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் இந்தியா முழுவதும் மொத்தமாக 10 லட்சம் மக்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதியிருந்தனர்.  நடந்து முடிந்த ஐஏஎஸ் தேர்வுகளின் முடிவுகள் இன்று அறிவிக்க உள்ளதாக மத்திய அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுக்காக மாணவர்கள் நீண்ட நாட்களாக காத்து கொண்டிருக்கின்றனர். தேர்வு எழுதிய மாணவர்கள் இணையதளத்தில் பதிவு செய்த எண்களை (Register Number) கொண்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளவும். 

www.upsc.gov.in

மத்திய அரசின் ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு