ads

சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இன்று தொடங்கியது

சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இன்று தொடங்கியது

சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இன்று தொடங்கியது

சிபிஎஸ்இ  கல்வி முறையின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம்  வகுப்பிற்கான பொது தேர்வுகள் இன்று தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தம் 28 லட்சம் மாணவ மாணவியர் இப்பொதுத்தேர்வை எழுதவுள்ளதாக சிபிஎஸ்இ கல்வி ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வுக்கும் 11 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கும் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இம்முறை சிபிஎஸ்இ ஆணையம் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவ மாணவியர்கள் தேர்வு அரங்கில் பழங்கள், நீரிழிவு நோய்க்கான மாத்திரைகள் எடுத்து செல்லலாம் எனவும், கண்ணாடி பாட்டிலில் மட்டுமே தண்ணீர் கொண்டு செல்லவும் அனுமதி வழங்கியிருக்கிறது, எனினும் சாக்குலேட்கள், பொட்டலத்தில் அடைத்த உணவுகள் போன்றவற்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் மடிக்கணினி  எடுத்து செல்லவும்  அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 7000-கும் அதிகமான மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வுக்கு தங்களை பதிவு செய்துள்ளதால் இம்முறை சிபிஎஸ்இ கல்வி ஆணையம் மடிக்கணினியை  தேர்வறைக்குள் அனுமதித்திருக்கிறது. 

சிபிஎஸ்இ கல்வி ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியின்படி இம்முறை பத்தாம் வகுப்பிற்கான தேர்வு மதிப்பீட்டு முறை மாற்றப்பட்டுள்ளது. இதற்க்கு முன் செயல்பாட்டிலிருந்த  விரிவான மற்றும் தொடர்ச்சியான மதிப்பீட்டு முறை கைவிடப்பட்டுள்ளதாகவும் அதுமட்டும் அல்லாமல் பத்தாம் வகுப்பிற்கு மட்டும் தேர்ச்சி விழுக்காடு 33%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், அது இந்த வருடம் மட்டுமே கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ கல்வி ஆணையம் 2018-ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுகளை இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டிலிருந்தும் எழுதுவதற்கான வழிவகையை செய்துள்ளது அதற்காக வெளிநாடுகளிலும் தேர்வு மையங்களை நிறுவியுள்ளது சிபிஎஸ்இ கல்வி ஆணையம்.

சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இன்று தொடங்கியது