ads

தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் அவசர சட்டத்திற்கு கையெழுத்திட்ட குடியரசு தலைவர்

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, புதிய தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, புதிய தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த மாதம் செப்டம்பர் 26ஆம் தேதி இந்திய மருத்துவ கழகம் (Medical Council of India) கலைக்கப்பட்டு சீர்திருத்த நடவடிக்கை செய்ய ஆளுநர்கள் வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய சுகாதார மற்றும் குடும்பநல துறை அமைச்சகம், குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் சார்ந்த குழுவிற்கு மருத்துவ கழகத்தை (MCI) காலி செய்ய கோரிக்கையை வைத்தது.

புதிய கட்டுப்பாட்டு குழு அமைக்கும் வரை, மருத்துவ கழகத்தின் உரிமைகளை நிர்வாகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சுகாதார துறை வலியுறுத்தியது. இதற்கான ஒப்புதலில் குடியரசு தலைவர் கையெழுத்திட்ட நிலையில் மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைத்திட அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கழகத்தின் மீது லஞ்சம் ஊழல் போன்ற பல புகார்களில் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் இந்திய மருத்துவ கழகத்தை கலைத்து தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. மருத்துவ கழகத்தின் சீர்திருத்த நடவடிக்கைகளை செய்வதற்காக ஆளுநர்கள் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா, பாராளுமன்றத்தில் இன்னும் நிலுவையில் தான் உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் அவசர சட்டத்திற்கு கையெழுத்திட்ட குடியரசு தலைவர்