ads
மாணவர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த RRB தேர்வு தேதி அறிவிப்பு
புருசோத்தமன் (Author) Published Date : Jul 25, 2018 17:16 ISTEducation News
இந்தியன் ரயில்வேயில் காலி பணியிடங்களை நிரப்பும் கட்டுப்பாட்டு மையம் (Railway Recruitment Control Board) இந்தியன் ரயில்வே துறையில் குரூப் சி பிரிவில் ALP (Assistant Loco Pilot) மற்றும் தொழில்நுட்ப (Technicians) வல்லுனர்களுக்கான தேர்வு தேதியினை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி கணினி மூலம் நடைபெறும் தேர்வு (Computer-Based Test - CBT) வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடக்கவுள்ளது. தேர்வுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளதால் தேர்வு எழுத போகும் மாணவர்கள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர்.
26,502 லோகோ பைலட் காலி பணியிடங்களுக்கு கணினி அடிப்படியிலான தேர்வில் 47.56 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். நாளை (ஜூலை 26) முதல் இந்த தேர்வின் முதற்கட்ட இணைப்பு செயல்படுத்த படுகிறது. தேர்வு நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு விண்ணப்பதாரர்கள் RRBயின் அதிகாரபூர்வ தலத்தில் ஆன்லைன் நுழைவு சீட்டை பெற்று கொள்ளலாம்.
மேலும் தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் RRB அளிக்கும் இணையதளம் மூலம் தேர்வு நடக்க போகும் இடம், நேரம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வில் தேர்வு நேரம், மாற்று திறனாளிகளுக்கு 80 நிமிடங்களாகவும், பொது தேர்வர்களுக்கு 60 நிமிடங்களாகவும் உள்ளது. இது தவிர தேர்வில் 75 கேள்விகளுக்கு தேர்வர்கள் அளிக்கும் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் கழிக்கப்படுகிறது.