ads

ஆசிரியர் மாணவர்களை கண்டிக்கும் காலம் போய் மாணவர்கள் ஆசிரியரை கண்டிக்கும் நிலை உருவாகி விட்டது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவர்கள் தாமதமாக வரும் ஆசிரியர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவர்கள் தாமதமாக வரும் ஆசிரியர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர்கள் வருங்காலத்தில் எப்படி இருக்க வேண்டும், எப்படி முன்னேற வேண்டும் என்ற நோக்கம், இலட்சியம் அவர்களின் பள்ளிப்பருவத்திலிருந்தே தொடங்குகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்ற கனவோடு பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். தங்கள் கனவு மெய்ப்பட தரமான சிறந்த நடைமுறைகள் நிறைந்த தனியார் பள்ளிகளை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர்.

அரசு பள்ளிகள் அவர்களின் சிந்தனைகளில் கூட வருவதில்லை. தற்போது பெரும்பாலும் பெற்றோர்கள் அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளை நாடி செல்கின்றனர். இதற்கு காரணம், அரசு பள்ளிகளில் இருக்கும் தரம் குறைந்த கட்டிடங்களும், ஆசிரியர்களும் தான். அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களோ ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் படிக்கவே தடுமாறுகிறான். இதற்கு அரசாங்கம் மற்றும் ஆசிரியர்களின் அலட்சியமே காரணம். லஞ்சம், ஊழல் என்பது அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் ஆட்டி படைக்கிறது. நடுத்தர மக்களும் சரி, வசதிபடைத்த மக்களும் சரி பெரும்பாலும் தங்கள் குழந்தைகள் நல்லா படிக்க வேண்டுமென்று தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கின்றனர்.

ஆனால் வசதியில்லாத சாமானிய மக்கள் வேறு வழியில்லாமல் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்கின்றனர். அவர்களின் குழந்தைகளும், நல்ல படித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், அப்பா, அம்மாவின் சுமைகளை குறைக்க வேண்டும் என்ற ஏராளமான கனவுகளுடன் பள்ளிகளில் அடியெடுத்து வைக்கின்றனர்.

ஆனால் அவர்களின் கனவுகளும், லட்சியமும் ஆசிரியர்களின் பொறுப்பின்மையால் அங்கேயே புதைந்து விடுகிறது. அரசி பணியாளர் என்றாலே பெரும்பாலும் கர்வமும், பொறுப்பற்ற செயலும் பொது மக்களை வேதனை அடைய செய்கிறது. அனைத்து ஆசிரியர்களையும், அரசு பணியாளர்களையும் குற்றம் சுமத்தவில்லை. 100 அரசு பணியாளர்களுக்கு மத்தியில் 50க்கும் மேற்பட்டோர் இத்தகைய எண்ணத்தில் தான் திரிகின்றனர்.

மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் 'குரு' என்று போற்றப்படுவர். ஆனால் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் நடக்கும் அவலங்களும், ஆசிரியர்களின் ஒழுக்ககேடற்ற செயல்களும் 'குரு' என்ற பெயரை கலங்க படுத்துகிறது. சமீபத்தில் பூ, போட்டு வைத்து பள்ளிக்கு வந்த மாணவிகளை தாக்கிய ஆசிரியரும், பள்ளிக்கு மது அருந்திவிட்டு தரையில் போதையில் மயங்கி கிடந்த ஆசிரியரும் என அரசு பள்ளிகளை மக்களிடத்தில் சிரிக்க வைக்கிறது.

இதனை தொடர்ந்து தற்போது பள்ளிக்கு லேட்டாக வரும் ஆசிரியர்களை கண்டித்து மாணவர்கள் பள்ளியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய அவலம் நமது நாட்டை தவிர வெறும் எங்கும் நடைபெறாது. விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உள்ள சின்ன அத்திகுளம் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 21 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர்.

21 மாணவர்களுக்கு 5 ஆசிரியர்கள் உள்ளனர். 50 வருடம் பழமை வாய்ந்த இந்த பள்ளியில் 5 ஆசிரியர்கள் இருந்தும் கடந்த ஒருவருட காலமாக ஆசிரியர்கள் பணிக்கு லேட்டாகவே வருகின்றனர். பள்ளி வேலை நேரம் காலை 8:45 முதல் மாலை 5:00 மணி வரை. ஆனால் பள்ளிக்கு ஆசிரியர்கள் 11 மணிக்கு மேல் தான் வருகின்றனராம். இது குறித்து மாணவர்கள் அவ்வப்போது பெற்றோரிடம் தெரிவித்து வந்துள்ளனர்.

பெற்றோர்கள் ஆசிரியரிடம் தெரிவித்தும் தொடர்ந்து பணிக்கு தாமதமாகவே வந்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு பூட்டு வைத்து பள்ளியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனை அறிந்து உடனே ஆசிரியர்கள் விரைந்து வந்துள்ளனர். இந்த செய்தி சில பேருக்கு சிரிப்பாக இருக்கலாம், ஆனால் ஏராளமானோரை கோபமடைய செய்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பள்ளி மாணவர்களின் தற்கொலைகளும், ஆசிரியர்களின் ஒழுங்கீனற்ற செயல்களும் பெற்றோர்களுக்கு மேன்மேலும் அதிர்ச்சியை அளித்து வருகிறது. பள்ளிக்கு பயில செல்லும் மாணவர்களுக்கு பயில வழியில்லை என்றால் அவர்கள் எதற்காக பள்ளிக்கு செல்ல வேண்டும்.

செயல்படாத பள்ளி எதற்கு, ஆசிரியர்கள் எதற்கு, மக்களுக்கு தரமற்றதாகவே தனது சிறப்பான பணியை செய்து வரும் அரசாங்கம் எதற்கு என்ற கேள்விகள் மக்களிடத்தில் ஆழமாக பதிய தொடங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் போராட்டங்களால் இது போன்ற செயல்களும் மக்களிடம் அரசின் மீது மீண்டும் மீண்டும் வெறுப்பை உண்டாகியுள்ளது. 

ஆசிரியர் மாணவர்களை கண்டிக்கும் காலம் போய் மாணவர்கள் ஆசிரியரை கண்டிக்கும் நிலை உருவாகி விட்டது