ads

சென்னையில் ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

இந்த ஆண்டின் ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த ஆண்டின் ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தேர்வாணையம் (UPSC) சார்பில் பல துறைகளில் காலி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு பலதரப்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வுகளுக்காக மாணவர்கள் சிறந்த பயிற்சி மையத்தை தேர்வு செய்து பயின்று வருகின்றனர். சமீபத்தில் வனத்துறை (IFS - Indian Forest Service) தேர்வுகள் நடத்தப்பட்டு இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவில் 110 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த தேர்வில் சென்னையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் கிங்ஸ்மேக்கர்ஸ் IAS அகாடமி (KingMakers IAS Academy) மூலம்  வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவிக்க கிங்மேக்கர்ஸ் IAS அகாடமியில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி திங்கட் கிழமை பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் வெற்றி பெற்ற மாணவர்கள் சித்தார்த்தா,ஜெகதீஸ்வரன், விஜய், ஆனந்தம், பிரசாந்த், சுவேதா போத்து, பிரவீன், ஆனந்த் ரெட்டி எள்ளு, ரோய்ஸ்டன், ப்ரதாப் மற்றும் அஸ்வின் குமார் ஆகிய மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வெற்றி பெற்றதன் அடையாளமாக நினைவு பரிசுகளும், சிறந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

இது குறித்து கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் கூறியதாவது "இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வனத்துறை அதிகாரி மற்றும் ஆலோசகரான உபாத்யாய், நிதி அமைச்சகம் மற்றும் வருவாய் துறை அதிகாரியான சேகர், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். இது போன்று மாணவர்களின் கனவை நினைவாக்க துடிக்கும் கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி இந்த ஆண்டு பயிற்சியினை வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. 

சென்னையில் ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா