ads
நல்ல தர்பூசணி பழத்தை தேர்வு செய்வது எப்படி அதில் மறைந்துள்ள வேதிப்பொருள்
வேலுசாமி (Author) Published Date : Feb 17, 2018 14:58 ISTHealth News
நாம் வெளியில் செல்லும் போது ஏராளமான பழக்கடைகள் நம் கண்களுக்கு புலப்படும். ஆனால் அனைத்து கடைகளிலும் தரமான பழங்களை விற்பதில்லை. உடல் நலத்தை பெருக்க பழங்கள் சாப்பிடுவது நல்லது தான். ஆனால் வெளியில் கடைகளில் விற்கும் பழங்களின் குணாதிசியங்களை அறியாமல் அதை உண்பது தவறானது.
தர்பூசணி பழம் அதிகமாக பயிரிடப்படும் நாடுகளில் சீனா முக்கியமானதாக விளங்குகிறது. ஆனால் விவசாயிகள் தர்பூசணி பழத்தை பயிரிடும் போது பழம் சீக்கிரமாக வளருவதற்கு உரத்திற்காக 'FORCHLORFENURON' போன்ற சில அபாயகரமான ரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றனர். முதலில் இதை பயன்படுத்த ஆரம்பித்த போது நல்ல உதவியாகத்தான் இருந்தது.
இந்த ரசாயனத்தை பயன்படுத்துவதன் மூலம் தர்பூசணி பழம் வழக்கத்தை விட 20 சதவீதம் கூடுதலாகவும் அதிவேகமாகவும் வளர்ந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த ரசாயனத்தில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அதிகப்படியான வேதிப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. தர்பூசணி பழத்தின் அதிவேக வளர்ச்சியினால், பழத்தின் இடையில் வெற்றிடம் அல்லது பிளந்ததை போன்ற அமைப்பு உருவானது.
தர்பூசணி பழத்தின் வளர்ச்சிக்கேற்ப அதன் அமைப்பு மாறுபடும். உதாரணமாக தர்பூசணி பழம் வழக்கத்தை விட பெரியதாக இருந்தால் வெள்ளை விதையை விட கருப்பு விதைகள் அதிகமானதாக இருக்க வேண்டும். ரசாயன பொருள் பயன்படுத்தியதால் அவர்களுக்கு பழத்தின் அமைப்பும், அதன் சுவையும் மாறியிருந்தது. இதனை விவசாயிகள் தவறாக பயன்படுத்தி கொள்ள ஆரம்பித்தனர்.
சுமார் 1980-காலங்களில் தர்பூசணியின் வளர்ச்சிக்கு 'FORCHLORFENURON' என்ற வேதிப்பொருளை பயன்படுத்துவதை நன்மையானதாகவே பார்த்தனர். இந்த கருத்தை காய்கறியின் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் 'Cui Jian' என்பவர், தர்பூசணி பழம் அதிக உணர்திறன் மிக்க பழம் என்பதால் பழத்தின் வளர்ச்சிக்கு வேதி பொருள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அதனை மறுத்தார்.
அமெரிக்காவில் 'FORCHLORFENURON' என்ற வேதி பொருளை கிவி பழம் (kiwi fruit) மற்றும் திராட்சை போன்றவற்றின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சுற்று சூழல் பாதுகாப்பு நிறுவனம் (United States Environmental Protection Agency) ரசாயன பொருட்கள் உடலுக்கு புற்று நோயை ஏற்படுத்தாது தான் ஆனால் உரத்திற்காக பயன்படுத்தும் இந்த வேதி பொருளை பழத்தின் வளர்ச்சிக்கு முன்னதாகவே அதை உபயோகிக்க அறிவுறுத்துகிறது.
மேலும் இந்த 'FORCHLORFENURON' வேதி பொருளினால் விலங்குகளுக்கு மிகவும் நச்சு தன்மை வாய்ந்தது என்றும், இதனால் முடி உதிர்வு, வளர்ச்சி குறைவு மட்டுமல்லாமல் இளமையில் இறக்கும் விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வளவு தான் நமது மக்களுக்கு அறிவுரை கூறினாலும் வியாபாரிகளுக்கு 'செவிடன் காதில் சங்கு ஊதியது' போலத்தான். இந்த செயலை பணத்திற்காக ஏராளமான மக்கள் பின்பற்ற ஆரம்பித்தனர். தற்போது அனைத்து பழங்களிலும் வேதி பொருள் கலப்பது பலமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது தரமான நல்ல தர்பூசணி பழத்தை தேர்ந்தெடுப்பதை பற்றி பார்க்கலாம்.
1. முதலில் பழத்தின் அமைப்பை நன்றாக கவனிக்கவும், பழம் நிலத்தில் நீண்ட நாள் வளருவதால் பழத்தின் அடியில் வெளிறிய நிறம் போன்று தோன்றும்.2. நல்ல பழுத்த தர்பூசணி பழம் அடர் பச்சை நிறத்தில் தோன்றும். ஆனால் பழுக்காத ஒரு சில பழங்கள் இளம் பச்சை நிறத்தில் தோன்றும்.3. தர்பூசணி பழத்தை வாங்கும் போது நன்றாக தட்டி பார்க்க வேண்டும். அப்படி தட்டும் போது நன்றாக சத்தம் வந்தால் அது நல்ல பழுத்துள்ளது என்று அர்த்தம்.4. பழத்தின் தோலின் மீது சிலந்தி வலையை போன்ற சிறு அமைப்பு தோன்றும். இந்த அமைப்பானது தேனீக்களின் மகரந்த சேர்க்கையின் போது உருவானது. இதனால் தர்பூசணி மிகவும் சுவை மிக்கதாக இருக்கும்.5. தர்பூசணியில் இரண்டு அமைப்புகள் உள்ளது. ஒரு அமைப்பில், நீண்டதாகவும் அகலமாகவும் இருக்கும். இந்த வகை பழங்களில் நீர் சத்துக்கள் அதிக அளவில் காணப்படும். மற்றொரு வகை அமைப்பில் குட்டையாகவும், அகலமாகவும் இருக்கும். இந்த வகை பழங்களில் நல்ல சுவையும், அதிகப்படியான விதைகளும் காணப்படும்.6. தர்பூசணி பழங்களின் இரண்டு வகைகளிலும் நீர் சத்துக்கள் காணப்படுவதால் அதிக கனமிக்கதாக இருக்கும்.7. தர்பூசணி பழத்தின் வாலில் நன்றாக காய்ந்து பழுப்பு நிறமும், பச்சை நிறமும் காணப்படும். இதில் பழுப்பு நிற பழங்கள் நன்றாக பழுத்த பழமாக இருக்கும். பச்சை நிறமுள்ள பழங்கள் பழுக்காத கனி வகையை சேர்ந்தது.
தர்பூசணி பழத்தின் பலன்கள் :
மனிதனின் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பழம் மட்டுமல்லாமல் வெயில் காலத்திற்கும் உடல் நலத்திற்கும் ஏற்ற ஒரு பழம் தர்பூசணி. இந்த பழத்தில் பல நன்மைகள் உள்ளது. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தையும், உடலின் வெப்பத்தையும் சரி செய்ய முடியும். நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் கட்டி, ஆஸ்துமா, பெருந்தமணி வீக்கம் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.
தர்பூசணியில் தாதுக்கள், கார்போ ஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் ஆகியவை உள்ளது. தர்பூசணி உடல் நலத்திற்கு ஊட்டசத்து வழங்க கூடிய பழவகைகளில் ஒன்று. இதை பழமாக வாங்கியும் அல்லது பழச்சாறாகவும் சாப்பிடலாம். தர்பூசணியின் 100 கிராம் அளவில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போ ஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது.
மேலும் இந்த பழம் தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக உள்ளது. தர்பூசணியை குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும். தர்பூசணியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ [போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. நமது உடலின் முக்கிய உறுப்புகளான தமணி, ரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது. உடலிற்கு தேவையான இன்சூலினையும் மேம்படுத்தும். மேலும் தர்பூசணி பழத்தின் தோல் மற்றும் விதையும் பலன் தரக்கூடியது.