ads

இந்த வகை மீன்களை சாப்பிடுவதினால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்

mercury hazardous fishes

mercury hazardous fishes

மீன் சாப்பிடுவதினால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள் 

நம் அனைவருக்கும் மீன் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகளை பற்றித்தான் தெரியும். பெரும்பாலானோருக்கு மீன் சாப்பிடுவதனால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகளை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு.

பொதுவாக மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது, இது அணைத்து மீன் வகைகளுக்கும் சேராது. பெரும்பாலான கடல் வாழ் மீன்களை சாப்பிட்டால் அல்லது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் மீன்களை சாப்பிட்டால் நமக்கு விரைவில் மூளை செயல்பாட்டு திறன் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிப்படைவது நிச்சியம்.குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் அறவே தவிர்ப்பது நன்று.

இதற்கு முக்கிய காரணம் மீனில் உள்ள பாதரசம் ( Mercury ). மீனில் எப்படி பாதரசம் வந்தது என்று தகவல் நம்மை மிகவும் ஆச்சர்யமும் அதிர்ச்சியூட்டும், கடல் மாசுபடுவது தான் இதற்கு முக்கிய காரணம். நம்மையும் அறியாமல் நாம் நகரங்களை மாசு படுத்துவதை போல் சில தொழிற்சாலைகள் கடலையும் மாசுபடுத்துகின்றன. அவ்வாறு மாசுபடும் கடல் பகுதியில் வாழும் மீன் வகைகள், அதை உட்கொள்ளும்போது பாதரசம் மிக எளிதாக மீன் உடம்பில் கலக்கிறது. 

இந்த பாதரசம் உள்ள பொருட்கள் பெரும்பாலும் மருத்துவ சாதனங்கள், அழகு பொருட்கள் மற்றும் தேவையற்றதாக தூக்கியெறியும் பல்வேறு பொருட்கள் இதில் அடங்கும். இவைகள் அனைத்தும் நாம் உபயோக படுத்திவிட்டு அலட்சியமாக தூக்கியெறியும் பொருட்களே.

இந்த செய்தி நமக்கு தெரிய வந்தது மிக தாமதமே. 2015 ஆண்டு இயற்கை வள பாதுகாப்பு மையம் (Natural Resources Defense Council) எனப்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிவித்து இருக்கிறது, நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்? அமெரிக்காவில் 2015 ஆண்டு நடந்த ஆராய்ச்சியில், எழுபது ஆயிரம் குழந்தைகளுக்குமேல் சராசரி அறிவுத்திறன் வளர்ச்சி குறைவாக  இருப்பதற்கு தாய்மார்கள் உட்கொள்ளும் உணவில் அதிகளவு   பாதரசம் இருப்பதே காரணம் என்கிறார்கள். 

இந்த பாதரசம் அதிகம் உள்ள மீன் வகைகளை தெரிந்துகொண்டு நாம் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. அதே போல், கடலில் வாழும் மீன்களுக்கு மாசு ஏற்படுத்தாமல் தவிர்ப்பதும் நல்லதே.

ஆராய்ச்சி முடிவில் மிக அதிக பாதரசம் கொண்ட மீன் வகைகள்.1. சுறா மீன் (Shark )2. கலவன், பண்ணி மீன், கோமேறி,கெளவன் ( Grouper )3. நீலமீன் (BlueFish )4. கடல் வாழ் சூரை, கீரை மீன் (Tuna (Bigeye, Ahi) )

மிக குறைந்த அளவு பாதரசம் மற்றும் சாப்பிட பாதுகாப்பானவை என அறிவித்த மீன் வகைகள் 1. நெத்திலி மீன் (Anchovies)2. விரால் மீன் (Butterfish)3. கெளுத்தி (Catfish)4. நண்டு (Crab )5. கெண்டை (Mullet )6. சிப்பி (Clams )7. வஞ்சரம் (Seer Fish )8. முரண் கெண்டை, அல்லதி, உலாத்தி ( Herring )

உள்ளூரில் சுகாதாரமான முறையில் வளர்க்கும் மீன் வகைகளையும் நாம் சாப்பிடலாம்.

இந்த வகை மீன்களை சாப்பிடுவதினால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்