ads

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நீரிழிவு நோய் ஏற்பட காரணம்: நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்பது உடலில் இன்சுலின் என்ற ஹார்மோன் சரியாக சுரக்காதது, குறைவாக சுரப்பது அல்லது சுரக்கும் ஹார்மோன் சீராக வேலை செய்யாதது போன்ற காரணிகள் தான் நீரிழிவு நோய் ஏற்பட அடிப்படை காரணமாகும். இன்சுலின் சுரப்பதை தடுப்பதற்கென்றே நம் உடலில் ஏற்கனவே சில காரணிகள் இருக்கின்றன. இந்த காரணிகள் சில தூண்டுதல்களால் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகின்றன. பரம்பரை தன்மை, உடல் பருமன் அதிகமாக இருப்பது, இன்சுலின் எதிர்ப்பு உணவு அதிகமாக உட்கொள்ளுதல், மன அழுத்தம், உடலில் கொழுப்பு, சோம்பலான வாழ்க்கை முறை போன்றவை மக்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைகின்றன.  

நீரிழிவு நோயின் வகைகள்:இந்த நீரிழிவு நோயில் மூன்று வகைகள் உள்ளது, முதல் வகை, இரண்டாவது வகை, மூன்றாவது வகை என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் வகையில் நீரிழிவு நோய் வந்தவர்களில் 10 சதவீதத்திற்கும் மேலாக உள்ளனர். இந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்க வேண்டும் ஏனென்றால் இன்சுலின் சுரக்கும் ஹார்மோன் முற்றிலும் செயலிழந்து காணப்படும். இது சிறுவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோர் பாதிப்படைகின்றனர்.

இரண்டாவது வகை நோயானது நீரிழிவு நோய் வந்தவர்களில் 90 சதவீதம் மக்கள் உள்ளனர். இந்த நோயானது வயது வந்தவர்களை தாக்கும் நோயாகும். உடல் எடையை குறைப்பதாலும், உண்ணும் உணவில் கட்டுப்பாடு வைப்பதாலும் இந்த நோயை குறைக்க வாய்ப்புள்ளது. மூன்றாவது வகை நோயானது கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் நோயாகும். குழந்தை பிறந்தவுடன் இந்த நோய் மறைந்துவிடுகிறது. இருந்தாலும் தாயையும் குழந்தையையும் பிற்காலத்தில் தாக்கும் வாய்ப்பை உண்டாக்குகிறது. 

நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் :அடிக்கடி தாகம், அடிக்கடி பசி, மிக வேகமாக சோர்வடைதல், கண்பார்வை மங்குதல், காயம் ஆறுவதற்கு தாமதம் ஏற்படுதல், மிக வேகமாக எடை குறைதல், பாதங்களில் உணர்ச்சி குறைவு மற்றும் எரிச்சல் ஏற்படுதல்.

நீரிழிவு நோயை தடுக்கும் வழிமுறைகள்:உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கவழக்கம் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். ஒரு நோயாளி உணவு கட்டுப்பாட்டில் அக்கறை செலுத்தினால் சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம். இதனை தவிர்த்தால் இதயம், கண்கள், பாதங்கள், சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. தங்களது அன்றாட உணவில் தானிய வகைகள், பருப்புவகைகள், காளான், காய்கறிகள், மோர் போன்றவைகளை உட்கொள்வதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம். மேலும் உருளை கிழங்கு, சேப்ப கிழங்கு, வள்ளிக்கிழங்கு போன்றவற்றை நீரிழிவு நோயாளிகள் அறவே தவிர்ப்பது நல்லது. பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள், மதுபானங்கள், சர்க்கரை, தேன், வெல்லம், பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்றவற்றையும் நோயாளிகள் தவிர்க்க வேண்டும். சாப்பிட்டவுடன் உடனே சோம்பேறிபோல் தூங்காமல் சிறிது நேரம் நடந்தால் உடலுக்கு நல்லது.

 

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்