ads

நச்சுக்காற்றை கட்டுப்படுத்தாது ஏன்?.மூன்று மாநிலங்களுக்கு நோட்டிஸ்

நச்சுக்காற்றை கட்டுப்படுத்தாது ஏன்?.மூன்று மாநிலங்களுக்கு நோட்டிஸ்

நச்சுக்காற்றை கட்டுப்படுத்தாது ஏன்?.மூன்று மாநிலங்களுக்கு நோட்டிஸ்

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நச்சுப்புகையாக மாறிய காற்று மாசுவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கைகள் வெளியிடும்படி டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோடீஸ் அனுப்பியுள்ளது. சமீபகாலமாக டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதையடுத்து வரும் 12-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான பணிகள் மற்றும் வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பத்திரிக்கை மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. 

தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி "டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்க டீசல் வாகனங்கள், கட்டுமான பணிகள், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாய நிலங்களில் அறுவடை முடிந்து எஞ்சியவற்றை எரிப்பது என பல காரணங்கள் கூறப்படுகின்றன. பனிக்காலம் துவங்குவதற்கு முன் இந்த பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க தகுந்த நிபுணர்களை வைத்து ஆய்வு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை முறையாக நடைமுறைப்படுத்தவேண்டும். நச்சு புகையில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவ பரிசோதனைகள் நடத்த வேண்டும்.இந்த பிரச்சினையில் உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்துக்கான மத்திய அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடுமப நல அமைச்சகம், நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம், டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில செயலர்கள் இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும்." என்று அதில் கூறப்பட்டுள்ளது. "

நச்சுக்காற்றை கட்டுப்படுத்தாது ஏன்?.மூன்று மாநிலங்களுக்கு நோட்டிஸ்