ads

டெல்லி காற்று மாசுபாடு அபாயத்தின் உச்சத்தை எட்டியது

டெல்லி காற்று மாசுபாடு அபாயத்தின் உச்சத்தை எட்டியது

டெல்லி காற்று மாசுபாடு அபாயத்தின் உச்சத்தை எட்டியது

நாட்டின் தலைநகரமான டெல்லியில் இன்று காற்று மாசுபாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த காற்று மாசுபாடு பனி மூட்டத்தால் ஏற்பட்டது புகை காரணமாக இல்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றின் மாசுபாட்டின் அளவு காலை 9.00 மணியளவில் 446 ஆகவும் குர்கானில் 357 ஆகவும் பதிவாகியுள்ளது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் நீண்ட தொலைவு செல்லும் பயணங்கள் ரத்து செய்யப்பட்டது. ரயில்களின் பயணமும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பனி மூட்டம் காரணமாக ரயிலின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. 

தெளிவற்ற வானிலையால் சில விமானங்கள் வேறு விமான தளத்திற்கு திருப்பிவிடப்பட்டன. விமான நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கல்வித்துறை மந்திரி மனிஷ் சிசோடியா பள்ளிகளுக்கு சில நாட்களுக்கு விடுமுறை வழங்கவும் அறிவுரை வழங்கியுள்ளார். இன்று ஏற்பட்டுள்ள இந்த காற்று மாசுபாட்டினால் டெல்லியில் பல்வேறு இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.

இந்நிலையில் தற்போது டெல்லியில் யமுனா எஸ்பிரெஸ் சாலையில் தெளிவற்ற வானிலையால் 13 கார்கள் ஒன்றையடுத்து மற்றொண்டாக மோதி கொண்டது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் சாலைகளில் செல்வதற்கு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் காண்பித்துள்ளார் சமூக ஆர்வலர்கள். மேலும் இந்த காற்று மாசுபாடு தீவிரமடைந்தால் மக்களுக்கு சுவாசிப்பதற்கு அவதிப்படுவதோடு பல்வேறு நோய்கள் தாக்கப்படலாம் என்று அச்சம் அடைந்துள்ளனர்..  

Delhi - Yamuna Expressway Accident Video Here

டெல்லி காற்று மாசுபாடு அபாயத்தின் உச்சத்தை எட்டியது