ads

வட இந்தியாவை தொடர்ந்து தமிழகத்திலும் பணத்தட்டுப்பாடு

தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை.

தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை.

சமீப காலமாக வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் புதுநோட்டுகளை காண்பது அரிதாக உள்ளது. ஏடிஎம்களில் போதிய பணம் இல்லாததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ஆனால் இந்த பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது தான். தற்போது 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் அச்சிடப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

தற்போது வட இந்தியாவை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம்களிலும் பணத்தட்டுப்பாடு உள்ளதாக புகார் வந்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் காணப்படுவதில்லை, இதனால் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே தற்போது அதிகமாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. 2000 ரூபாய் புதிய நோட்டுகள் இல்லாததால் அதிகமாக 500, 100 ருபாய் நோட்டுகள் மட்டுமே ஏடிஎம்களில் இருந்து மக்களுக்கு கிடைக்கிறது. இதனால் விரைவாகவே ஏடிஎம்களில் பணம் தீர்ந்து விடுகிறது.

2000 ரூபாய் நோட்டுகள் திடீர் நிறுத்தப்படுவதற்கு காரணத்தை வங்கி அதிகாரியிடம் கேட்ட போது அவர்கள் இதற்கு முன்பு வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே தற்போது புழக்கத்தில் இருந்து வருகின்றன. எங்களுக்கு ரிசர்வ் வங்கியில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளின் சப்லை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பொது மக்களிடம் 2000 ரூபாய் நிறுத்தப்பட்டதற்கு காரணம் சில பண முதலைகள் தேர்தலுக்காக பதுக்குவதாகவும், ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் கருத்துக்கள் உலாவி வருகின்றன. இப்படியே போனால் மீண்டும் பண்டமாற்று முறை தான். அதுவும் நன்றாக தான் இருக்கும் 

வட இந்தியாவை தொடர்ந்து தமிழகத்திலும் பணத்தட்டுப்பாடு