ads
ஹிமாச்சலத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 26 குழந்தைகள் பலி
கோகுல் சரவணன் (Author) Published Date : Apr 09, 2018 20:39 ISTஇந்தியா
ஹிமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள நூற்புற் என்ற இடத்தில் உள்ள சுமார் 200 அடி பள்ளத்தாக்கில் பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 26 குழந்தைகள் உட்பட 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதில் இருவர் ஆசிரியர்கள் எனவும் ஒருவர் அந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர் எனவும் தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் 25 பேர் காயமடைந்ததாகவும் அம்மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடம் மலை முகடான இடம் என்பதாலும் ஆள் நடமாட்டம் குறைந்த இடம் என்பதாலும் இவ்விபத்திற்கான கரணம் வெளியிடப்படவில்லை. இவ்விபத்து குறித்து ஆராய காங்கிர மாவட்ட மஜிஸ்திரேடிற்கு ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாகூர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விபத்து பகுதியில் NDRF எனப்படும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட 25 மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சுமார் 50 மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தில் உயிர் நீத்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விபதடைந்த பேருந்து ஒரு தனியார் பள்ளிக்கு சொந்தமானது. பள்ளி முடிந்து மாணவர்களை வீட்டுக்கு கொண்டுசெல்லும் வழியில் இவ்விபத்து நடந்துள்ளது.