ads

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வாங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயலாற்றி வருகிறது. இதில் சென்னை, விருகம்பாக்கத்தில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் கிளையில் நேற்று மர்ம நபர்களால் 33 லட்சம் ரொக்க பணம் மற்றும் 133 பைகளில் இருந்த தங்க நகைகள் முதலியவை கொள்ளையடிக்க பட்டுள்ளது.

இந்த கிளையானது காலை 9:30 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்பட்டு வருகிறது. இதற்கு வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் காவலாளியாக பணிபுரிகிறார். வழக்கம் போல் காலை 9:30 மணிக்கு அதிகாரிகள் வந்து அலுவலகத்தை திறந்து பார்த்தபோது வங்கியின் பின்புற சுவரில் ஓட்டை இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். லாக்கரில் சென்று பார்த்த போது வெல்டிங் மூலம் லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தது.

உடனே போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது போலீசார் வங்கி அதிகாரிகளிடமும், வங்கியின் சிசிடிவி கேமிராவை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் வங்கியில் பணிபுரியிலும் வேலையாட்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வேலையாட்கள் அறை அருகே லாக்கர் ரூம் இருப்பதால் சந்தேகம் வேலையாட்கள் மீதுள்ள சந்தேகம் தீவிரமடைந்துள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை