ads
நெஸ்ட்லே நிறுவனத்தின் மீது 45 லட்சம் அபராதம்
மோகன்ராஜ் (Author) Published Date : Nov 29, 2017 22:34 ISTஇந்தியா
மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நெஸ்ட்லே நிறுவனத்தின் மீது 2015-ஆம் ஆண்டு தரம் குறைவாக இருப்பதால் அதனை விற்பனை செய்ய தடை விதித்திருந்தது. இதனை அடுத்து தற்போது உத்திர பிரதேசத்தில் மேகி நூடுல்ஸ் மறுபடியும் தோல்வியடைந்ததாக தகவல்கள் வெளியாகிறது. 2015-ஆம் ஆண்டு மேகி நூடுல்ஸில் அதிகப்படியான ரசாயன பொருட்கள் இருந்ததனால் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது மனிதர்கள் உட்கொள்ளும் சராசரி அளவை விட அதிகப்படியான சாம்பல் போன்ற பொருட்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆய்வக பரிசோதனையில் தோல்வியுற்றதால் நெஸ்ட்லே நிறுவனத்திற்கு உத்திர பிரதேச அரசு 45 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் "கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு சாஜஹான்பூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உட்படுத்தினர். அதில் மனித உடம்பு ஏற்றுக்கொள்வதை விட சாம்பல் பொருட்கள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே மேகி தயாரிக்கும் நெஸ்ட்லே நிறுவனத்தின் மீது 45 லட்சம் அபராதமும், மூன்று விநியோகஸ்தரர்களுக்கு 15 லட்சமும், இரண்டு விற்பனையாளருக்கு 11 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளது. இதனை மறுத்துள்ள நெஸ்ட்லே நிறுவனம் "இந்த மாதிரிகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளது அல்ல, 2015-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்வோம்." என்று நெஸ்ட்லே நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது.