ads

நான் நினைத்தால் இப்போது கூட பிரதமர் ஆக முடியும்..பாபா ராமதேவ்

பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ், நான் எப்போது நினைத்தாலும் பிரதமராகி விடுவேன் என்று சர்ச்சை கருத்தை பதிவு செய்துள்ளார்.

பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ், நான் எப்போது நினைத்தாலும் பிரதமராகி விடுவேன் என்று சர்ச்சை கருத்தை பதிவு செய்துள்ளார்.

மூச்சு பயிற்சி, யோகா பயிற்சி, ஆயுர்வேத மருத்துவம் போன்றவற்றில் பிரபலமாகி வரும் பாபா ராமதேவ், பதஞ்சலி என்ற ஆயுர் வேத நிறுவனத்தை இயக்கி வருகிறார். இவருடைய பதஞ்சலி நிறுவனம் தற்போது பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பெருமளவு வளர்ச்சியை கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பின்னால் பாஜக இருப்பதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் நான் இப்போது நினைத்தால் கூட பிரதமராக முடியும் என்று கோவாவில் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாக எழுந்துள்ளது. கோவாவில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் "எனக்கு நான் நடத்தும் நிறுவனத்தின் மூலம் எப்போதும் வருமானம் தேவைப்பட்டது இல்லை. நல்ல தரமான பொருட்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் விற்று வருகிறேன். எனக்கு கிழக்கிந்திய கம்பெனி மீது எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது.

இதனால் அவர்களை போன்று ஒரு நிறுவனத்தை இந்தியாவில் வளர செய்ய வேண்டும் என்று நினைத்து இந்நிறுவனத்தை வளர்த்தேன். தற்போது இது பெரியதாக மாறியுள்ளது. நான் இப்பொழுது நினைத்தால் கூட பிரதமராக முடியும், அதற்கு பாஜகவில் எனக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எனக்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. நான் இப்படியே பதஞ்சலி பொருட்களை விற்கவும், பொது மக்களுக்கு சேவை செய்யவும் விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

நான் நினைத்தால் இப்போது கூட பிரதமர் ஆக முடியும்..பாபா ராமதேவ்