ads

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை - பருவமழையின் தொடக்கத்திலே இப்படியா மக்கள் பீதி

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை - பருவமழையின் தொடக்கத்திலே இப்படியா மக்கள் பீதி

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை - பருவமழையின் தொடக்கத்திலே இப்படியா மக்கள் பீதி

சென்னையில் சில தினங்களுக்கு முன்னால் வடகிழக்கு பருவமழை ஆரம்பமானது. இதனால் அன்று பெய்த ஒரு நாள் மழைக்கே சென்னையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். மழை சற்று ஓய்ந்த நிலையில் நேற்று காலை தூரலுடன் ஆரம்பித்த மழை தீவிரமடைந்து விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் ஆங்காங்கே தண்ணீர் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதனை அடுத்து சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் மூடப்பட்டது இதனால் அடிப்படை தேவைகள் கிடைக்காததால் சென்னை மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் இதுவரை 4.5 செ.மீ மழை பெய்திருக்கவேண்டும் ஆனால் தற்போது 17 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 2015-ஆம் ஆண்டு பெய்த மழையை விட சற்று அதிகமாக மழை பதிவாகியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் வீடுகள், சாலைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினர். 

அடையார், எழும்பூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளமயமாக காட்சியளிக்கிறது. அலுவலகங்களுக்கு சென்ற ஊழியர்கள் பலத்த மழையினால் அலுவலகங்களில் தங்கி வருகின்றனர். சென்னையில் சுரங்க பாதைகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வேளச்சேரி பகுதிகளில் 19செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 16 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மெரினா கடற்கரை முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தேனாம்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேறோடு சாய்ந்தன. ஏரி நீராலும் மழை நீராலும் சென்னையில் 3 அடிக்கு மேல் தண்ணீர் புகுந்துள்ளது. 

தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் கருணாநிதி, துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும் மழைநீர் புகுந்துள்ளது. இந்த பருவமழை 8-ஆம் தேதி வரை தீவிரமடையும் என்பதால் தொடக்கத்திலே இப்படியானால் பருவமழை முடிந்தால் சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை - பருவமழையின் தொடக்கத்திலே இப்படியா மக்கள் பீதி