ads

செக் மோசடி வழக்கில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்

powerstar srinivasan cheque case

powerstar srinivasan cheque case

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர். ரியல் எஸ்டேட் உரிமையாளரான வரதராஜன் என்பவருக்கு 10 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி, அதற்கு முன்பணமாக 60 லட்சம் தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட சீனிவாசன் கடன் வாங்கி தருவதாக சொன்ன பணத்தை தரவில்லை. பணத்தை தரமுடியாததால் 30 லட்சத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள 30 லட்சத்திற்கு செக் போட்டு கொடுத்திருக்கிறார். அந்த செக் அவர் கணக்கில் பணம் இல்லாததால் செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. பின்னர் வரதராஜன் துறையூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

பலமுறை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியும் சீனிவாசன் வராததால் நீதிபதி சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.இவர் ஏற்கனவே 2012 இல் ஜி. யு. பாலசுப்பிரமணியன் எனும் குரோம்பேட்டையிலுள்ள ஆர்.பி.எசு இன்டர்நேசனலின் உரிமையாளரை ஏமாற்றி மோசடி செய்ததற்காக சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் 2013 ஏப்ரல் 26 இல் மத்திய குற்றப்பிரிவு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது. இதற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் அவர் தொடர்புபட்டிருந்தமை காரணமாகவிருந்தது.

செக் மோசடி வழக்கில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்