ads
மலையாள நடிகர் பகத் பாசில் கைது செய்து விடுதலை
வேலுசாமி (Author) Published Date : Dec 26, 2017 16:37 ISTஇந்தியா
மலையாள நடிகரான பகத் பாசில், சொகுசு கார் மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். இவர் கேரளாவில் வங்கி ஒன்றில் கடன் பெற்று சொகுசு காரை விலைக்கு வாங்கியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். போலி முகவரியில் வசிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். இந்த முகவரியில் போலீசார் விசாரித்தால் அவர் யாரென்றே தெரியாது என்று தெரிவித்துள்ளனர். கேரளாவில் வரி அதிகம் என்பதால் புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்வது வழக்கமாகிவிட்டது. கேரளாவில் இயங்கும் சொகுசு காருக்கு விலையின் 20% வரியை செலுத்தவேண்டும். அது கிட்டத்தட்ட 16 லட்சம் ஆகும் என்பதால் புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து பகத் பாசில் மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை அடுத்து குற்றப்பிரிவு போலீசார் நடிகர் பகத் பாசிலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் பகத் பாசில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். செய்த குற்றத்திற்காக அபராதம் செலுத்த தயாராக இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து ரூபாய் 50 ஆயிரத்திற்கான கையெழுத்து பாத்திரம் மற்றும் இருவர் அளித்த உத்திரவாதத்தின் அடிப்படையில் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இவர் முன்னதாகவே ஆலப்புழா மீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்த சொகுசு கார் மோசடி வழக்கில் இவருடன் நடிகை அமலா பால், நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்திருந்தது. இதில் நடிகை அமலா பால் கேரளா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.