ads
கனமழையால் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வேலுசாமி (Author) Published Date : Aug 09, 2018 17:57 ISTஇந்தியா
மலைப்பிரதேசமான கேரளாவின் எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு போன்ற மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. விடாது பெய்து வரும் இந்த கனமழையில் சிக்கி இதுவரை 20பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளும் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை நிகழ்ந்து வருகிறது. இதனால் சாலைகள், விமான மற்றும் ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கனமழையால் கிட்டத்தட்ட 26ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி ஆணை நிரம்பி திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுப்புற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் மட்டுமல்லாமல் கர்நாடகத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, தஞ்சை, திருச்சி போன்ற 6 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளாவில் கனமழை தொடர்ந்து நீடிப்பதால் கபினி ஆணை மற்றும் கேஆர்எஸ் அணைகளில் 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்வள துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.