ads

ஹாவேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு உதவிய நட்சத்திரம்

ஹாவேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு உதவிய நட்சத்திரம்

ஹாவேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு உதவிய நட்சத்திரம்

அமெரிக்காவில் ஹாவேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான தனி இருக்கை அமைவதற்கு தமிழ் அறிஞர்கள் ஒரு வருடங்களாக நிதி திரட்டுவதில் ஈடுபட்டு வந்தனர். நிதி திரட்டியதில் 10 கோடி ரூபாய் குறைவாக இருந்ததால் தமிழக அரசிடம் நிதி உதவி கேட்கப்பட்டு, தமிழக அரசு 9.75 கோடி நிதி உதவி வழங்குவதற்கு ஒப்பு கொண்டது நமக்கு முன்பே அறிந்த தகவல், இந்நிலையில் மற்றவர்களும் நிதி உதவி செய்துள்ளனர்.  

ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி கனடாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஆர்யா கனடா என்ற நிறுவத்தின் முன்னிலையில் ஏற்பாடுகள் நடைபெற்றது. இதில் சித் ஸ்ரீ ராம், சாதா திருப்பதி, ஹரிசரண், சேஷாத்ரி, ஜோதிட காந்தி, பென்னி தயால், ஸ்ரீனிவாஸ் உட்பட பலர் கலந்து கொண்டு பாடல்களை பாடினர். இந்நிகழ்ச்சியில் மூலம் வசூலான தொகையிலிருந்து 16 லட்சத்தினை ஆர்யா கனடா நிறுவனம் ஹாவேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான தனி இருக்கை அமைவதற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.   

மேலும் தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால், ஹாவேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு 10லட்சம் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஹாவேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு மத்திய அரசும் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  

ஹாவேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு உதவிய நட்சத்திரம்