ads

நேபாளம் சர்வதேச விமான நிலையத்தில் வங்கதேச விமானம் விபத்து

நேபாளத்தில் தரையிறங்க முற்பட்ட வங்கதேச விமானம் விபத்து.

நேபாளத்தில் தரையிறங்க முற்பட்ட வங்கதேச விமானம் விபத்து.

வங்கதேசத்தில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டுக்கு யூஎஸ் பங்களா ஏர்லைன்ஸ் என்ற விமானம் இயக்கப்பட்டு வருகிறது.  யூஎஸ் பங்களா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பிஎஸ் 211 என்ற விமானம் நேபாளத்தில், திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் நண்பகல் 2:30 மணியளவில் தரையிறங்க முற்பட்ட போது அதன் அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமானத்தில் 78க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான இடம் முழுவதும் கரும்புகை வந்தவாறு உள்ளது. தகவல் அறிந்து வந்த காவல் அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை 17 பயணிகள் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு கொண்டு செல்ல பட்டுள்ளனர். இந்த விமானத்தில் பயணித்த ஏராளமான பயணிகள் இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திரிபுவன சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 

நேபாளம் சர்வதேச விமான நிலையத்தில் வங்கதேச விமானம் விபத்து