ads

நாட்டின் 13 மாநிலங்களுக்கு ஏற்படும் பேராபத்து - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த இரண்டு நாட்களுக்கு புயல் மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு புயல் மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக வட இந்தியாவில் நிலவி வரும் புயல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை காரணமாக தற்போது வரை 124 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் இயற்கை மாற்றங்கள் பூமியில் நிலவி வருவதால் பருவகாலங்கள் என்பது மாறி மாறி நிலவி வருகிறது. இதனால் தற்போது மழை, குளிர், வெப்பம் போன்ற அனைத்தும் மாறியுள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை வெயில் மக்களை வாட்டி வதைத்தது.

இதன் பிறகு திடீரென வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் புயலும் கனமழையும் வீச தொடங்கியது. இதனால் 300க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்து 124 மக்கள் உயிரிழந்துள்ளனர். வட இந்தியாவில் நிலவி வரும் புயல் காரணமாக தென் இந்தியாவிலும் ஏராளமான பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வானிலை மையம் மேலும் இரண்டு நாட்களுக்கு 13 மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் "தற்போது வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசங்களில் கனமழை பெய்து வருகிறது. இது மேலும் தீவிரமடைந்து புயல் மற்றும் பனிக்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே போல் டெல்லி, சண்டீகர், பஞ்சாப், ஹரியாணா, உத்திரகாண்ட், அஸ்ஸாம், மேகாலயம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா போன்ற மாநிலங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இது தவிர ராஜஸ்தானில் முன்னதாக புழுதி புயல் வீசிய நிலையில் மீண்டும் புழுதி புயல் மற்றும் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், தங்களது பாதுகாப்பு உடமைகளையும் பத்திரமாக வைத்திருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது." வானிலை மையம் அறிவித்த எச்சரிக்கையை அடுத்து தற்போது அரியானா போன்ற மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் 13 மாநிலங்களுக்கு ஏற்படும் பேராபத்து - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை